ஒரே ஒரு ரீசார்ஜ்.. ஒரு வருஷத்துக்கு கவலையில்லை.. பிஎஸ்என்எல்லின் செம பிளான்!
ஒரு வருட வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் இப்போது அறிமுகம் செய்துள்ளது.
BSNL
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அண்மைகாலமாக மாதாந்திர, வருடாந்திர கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதனால் அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருகின்றனர்.
BSNL NEW PLAN
ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா போன்ற நிறுவனங்கள் 4ஜி இணைய சேவை, 5ஜி இணைய சேவை என்று சென்றுவிட்டாலும், பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையை தொடங்கவில்லை. ஆனாலும் பிஎஸ்என்லுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து இருப்பதற்கு அது குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருவதே காரணமாகும்.
BSNL RECHARGE PLAN
அந்த வகையில் பிஎஸ்என்எல் இப்போது சூப்பரான அதிரடி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரு வருட வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தான் பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது. ரூ.2,999 விலை கொண்ட இந்த திட்டம் ஓராண்டு வேலிடிட்டி கொண்டதாகும். இந்த திட்டத்தின்படி மொத்தமாக 1095ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். வெறும் ரூ.200க்கு இத்தனை ஸ்கீம் இருக்கா? BSNLன் அட்டகாசமான திட்டங்கள்
BSNL PLAN
அதாவது இந்த திட்டத்தின்படி தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். அத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியும் கிடைக்கும். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் சலுகையும் பெறலாம். இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டா முடிந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தினசரி டேட்டா முடிந்தாலும் 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவையை பெற முடியும். இந்த ரூ.2,999 திட்டதில் உள்ள முக்கியமான அம்சம் இது விலை குறைவாக இருப்பதுதான் என்னப்பா சொல்ற, ரூ.2,999 உனக்கு விலை குறைவா? என நீங்கள் கேட்கலாம். இதே மாதிரியான ஒராண்டுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரூ.3,500க்கும் மேல் கட்டணம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
BSNL RECHARGE
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருக்கும் இந்த ரூ.2,999 திட்டத்தில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், இலவச எஸ்எம்எஸ் தவிர வேறு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. ஓராண்டுக்கு ரீசார்ஜ் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு இது வரப்பிரசாதமான ஒரு திட்டமாகும். புதிய ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் பிஎஸ்என்எல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து நீங்கள் ஆண்டு முழுவதும் அனுபவிக்க முடியும். ஏர்டெல் பிளாக்! வெறும் 24 ரூபாய்க்கு 12 OTT, ஹை ஸ்பீடு இன்டர்நெட், டிவி சேனல்ஸ்!