MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு செம நியூஸ்; உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேற போகிறது; சூப்பர் அப்டேட்!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு செம நியூஸ்; உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேற போகிறது; சூப்பர் அப்டேட்!

பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை எப்போது முழுமையாக வரும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், சூப்பர் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Rayar r
Published : Jan 05 2025, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BSNL 4G Service

BSNL 4G Service

பிஎஸ்என்எல் சேவை 

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்‍‍‍ ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 3ஜி, 4ஜி என்பதையும் தாண்டி 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. வோடோபோன்‍‍‍ ஐடியா 5ஜிபி சேவையை கொண்டு வர தயாராக உள்ளது. ஆனால் அர்சின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது. 

ஆனாலும் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்‍‍‍ ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வருவதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பிஎஸ்என்எல் எப்போது 4ஜி சேவையை வழங்கும்? என்று அதன் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அவர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் வகையில் பிஎஸ்என்எல் ஒரு குட் நீயூஸ் சொல்லியுள்ளது.

24
BSNL Recharge Plans

BSNL Recharge Plans

4ஜி சேவை எப்போது?

அதாவது பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.  4ஜி சேவை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎஸ்என்எல் 4ஜி சேவை வரும்போது முன்பு இருந்து இயங்கி வந்த 3ஜி நெட்வொர்க் முடக்கப்படும். 

முதற்கட்டமாக சில இடங்களில் 3G நெட்வொர்க்கை நிரந்தரமாக பிஎஸ்என்எல் நிறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கப்படும் இடங்களில்  3ஜி சிம்கள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காலிங் வசதி மட்டுமே கிடைக்கும், டேட்டா வசதி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்? VRS வேண்டாம், பிரமோஷன் வேண்டும் - BMS

34
BSNL Best Plans

BSNL Best Plans

4ஜி சிம் கார்டு எப்படி பெறுவது?

இது தொடர்பாக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் ஆர்.கே.சௌத்ரி கூறுகையில், ''பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் 4ஜி நெட்வொர்க் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் 3ஜி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 முதல் மீதமுள்ள பகுதிகளில் 3ஜி சேவையும் நிறுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

4ஜி சேவை முழுமையாக வந்த பிறகு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று பழைய 3ஜி சிம் கார்டுகளை கொடுத்து விட்டு புதிய 4ஜி சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். 

44
BSNL INDIA

BSNL INDIA

வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம் 

வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 2017ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட சிம் மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

பிஎஸ்என்எல் 4ஜி சேவை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் ஜிரோ, ஏர்டெல், வோடோபோன் ஆகிய நிறுவனங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஒரு ஸ்மார்ட்வாட்ச் போதும், மருத்துவரே தேவையில்லை; பட்ஜெட் விலையில் இத்தனை நன்மைகளா?

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கேமரா பிரியர்களுக்கு செம ட்ரீட்.. கெத்தாக களமிறங்கும் Oppo Find X9 Ultra.. என்னென்ன சிறப்பம்சங்கள்?
Recommended image2
கேமிங் பிரியர்களுக்கு பேரிடி! கிடுகிடுவென உயர்ந்த Sony PS5 விலை - புதிய ரேட் இதுதான்!
Recommended image3
சார்ஜர் கிடையாது.. ஆனா பேட்டரி வேற லெவல்! OnePlus Nord CE 6-ன் அசாத்திய சிறப்பம்சங்கள் - ஒரு பார்வை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved