MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • iPhone 18 Pro: ஐபோன் 18 ப்ரோ விலை குறைப்பு.. ரூ.57,000 அதிரடி ஆஃபரை பெறுவது எப்படி?

iPhone 18 Pro: ஐபோன் 18 ப்ரோ விலை குறைப்பு.. ரூ.57,000 அதிரடி ஆஃபரை பெறுவது எப்படி?

iPhone 18 Pro: புது ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு ஆப்பிளின் ஐபோன் 18 ப்ரோ ஒரு சூப்பர் சாய்ஸ். ஐபோன் 18 ப்ரோ விலையில் அதிரடி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.57,000 ஆஃபரை பெறுவது எப்படி? என விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 28 2026, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபோன் 18 ப்ரோ விலை அதிரடி குறைப்பு
Image Credit : Asianet News

ஐபோன் 18 ப்ரோ விலை அதிரடி குறைப்பு

புதிய ஐபோன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 18 ப்ரோ ஈர்த்துள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகும். எனினும், சில வங்கி கார்டுகள், பழைய ஐபோன் எக்ஸ்சேஞ்ச் மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றைச் சேர்த்தால், நாம் சேமிக்கும் தொகை கணிசமாக அதிகரிக்கும்.

இந்தியா ஐஸ்டோர் தற்போது வழங்கும் சலுகையின்படி, தகுதியான வாடிக்கையாளர்கள் கார்டு கேஷ்பேக் மற்றும் டிரேட்-இன் சலுகைகளைப் சேர்த்துப் பெறலாம். எனினும், ரூ.1,07,900 என்பது அனைவருக்கும் கிடைக்கும் நேரடி விற்பனை விலை கிடையாது என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட எக்ஸ்சேஞ்ச் மற்றும் சலுகைகளைப் சேர்த்த பிறகு வரும் கணக்கு மட்டுமே இதுவாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரூ.57,000 சேமிப்பு எப்படி?
Image Credit : Asianet News

ரூ.57,000 சேமிப்பு எப்படி?

ஐபோன் 18 ப்ரோ 256ஜிபி மாடலின் ஆரம்ப MRP ரூ.1,64,900 ஆகும். ஆக்சிஸ் வங்கி (Axis Bank), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) அல்லது எஸ்பிஐ (SBI) கார்டைப் பயன்படுத்தி ஈஎம்ஐ (EMI)-ல் வாங்கினால் அதிகபட்சமாக ரூ.7,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும். ஈஎம்ஐ இல்லாமல் வாங்கினால் ரூ.6,000 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்று இந்தியா ஐஸ்டோர் தெரிவித்துள்ளது.

இதுபோக, தகுதியான போன்களுக்கு ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். ரூ.22,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள பழைய போன்களுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 போனஸ் பொருந்தும் என்று இந்தியா ஐஸ்டோரின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

34
ரூ.1,07,900 விலை எவ்வாறு வருகிறது?
Image Credit : Asianet News

ரூ.1,07,900 விலை எவ்வாறு வருகிறது?

நீங்கள் பார்க்கும் அதிகபட்ச ரூ.57,000 சலுகைக் கணக்கை எளிமையாகப் பார்க்கலாம்:

ஐபோன் 18 ப்ரோ ஆரம்ப விலை: ரூ.1,64,900

வங்கி கேஷ்பேக்: ரூ.7,000

பழைய ஐபோன் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு: ரூ.40,000

கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ்: ரூ.10,000

மொத்த சலுகை: ரூ.57,000

சலுகை போக விலை: ரூ.1,07,900

44
ஐபோன் 18 ப்ரோவில் என்ன புதிய அம்சங்கள்?
Image Credit : Apple Website

ஐபோன் 18 ப்ரோவில் என்ன புதிய அம்சங்கள்?

ஐபோன் 18 ப்ரோவில் பெர்ஃபார்மன்ஸ், பேட்டரி மற்றும் கேமரா பிரிவுகளில் முக்கியமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 256ஜிபி மாடலில் 6.3-இன்ச் டிஸ்ப்ளே இடம் பெற்றுள்ளது. இதில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உட்பட பல அம்சங்கள் உள்ளன.

புதிய மாடலில் வேகமான ப்ராசஸிங், கேமரா அப்டேட்டுகள் மற்றும் பேட்டரி பெர்ஃபார்மன்ஸ் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே லேட்டஸ்ட் ப்ரோ மாடல் வைத்துள்ளவர்களுக்கு, இந்த அப்கிரேடு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர்களின் பயன்பாட்டைப் பொறுத்தது.

சலுகையை பெறுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

ரூ.57,000 சேமிப்பின் முழு பலனைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. தகுதியான வங்கி கார்டு , சரியான கட்டண முறை மற்றும் தகுதியான பழைய போன் எக்ஸ்சேஞ்ச் ஆகியவை அவசியமாகும். இதுமட்டுமின்றி, இந்தச் சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபோன்
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
3 நாள் பேட்டரி பேக்கப் தரும் மான்ஸ்டர் போன்: 9,000mAh பேட்டரி, 200MP கேமராவுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 16!
Recommended image2
Top 5 Gaming Laptops: வீடியோ எடிட்டிங் & கேமிங்; பட்ஜெட் டூ பிரீமியம் வரை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 லேப்டாப்ஸ்!
Recommended image3
Nokia Price Cut: ரூ.1,000 குறைந்த நோக்கியா போன்.. உங்க பெரிய ஸ்மார்ட்போனுக்கு குட்பை சொல்லுங்க!
Related Stories
Recommended image1
iPhone 17 Pro Offer: ரூ.69,990-க்கு ஐபோன் 17 ப்ரோ.! செம சலுகை.. உடனே வாங்குங்க மக்களே.!!
Recommended image2
Flipkart Big Billion Days 2026: ஐபோன் 17 முதல் சாம்சங் வரை 10% தள்ளுபடி.. மக்களே ரெடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved