MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Flipkart Big Billion Days 2026: ஐபோன் 17 முதல் சாம்சங் வரை 10% தள்ளுபடி.. மக்களே ரெடியா?

Flipkart Big Billion Days 2026: ஐபோன் 17 முதல் சாம்சங் வரை 10% தள்ளுபடி.. மக்களே ரெடியா?

Flipkart Big Billion Days 2026: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் முதல் சாம்சங் வரை எவ்வளவு தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது? என விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 26 2026, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Flipkart Big Billion Days 2026
Image Credit : AI

Flipkart Big Billion Days 2026

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை சீக்கிரம் தொடங்கப்போகிறது. 2026-ம் ஆண்டுக்கான இந்த பண்டிகை கால சேல் அக்டோபர் 9-ம் தேதி ஆரம்பமாகிறது. ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய அளவில் தள்ளுபடிகளும் ஆஃபர்களும் கிடைக்கப்போகின்றன.

பிளிப்கார்ட் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்களுக்கான ஆஃபர்களை வெளியிட ஆரம்பித்துள்ளது. ஆப்பிள், சாம்சங், கூகுள், மோட்டோரோலா, ரியல்மி, விவோ போன்ற முன்னணி பிராண்டுகளின் புது மாடல்களும், பட்ஜெட் போன்களும் இந்த விற்பனையில் இடம்பெறும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அக்டோபர் 9 முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனை
Image Credit : Asianet News

அக்டோபர் 9 முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 விற்பனை அக்டோபர் 9-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. ஆனால், பிளிப்கார்ட் பிளஸ், பிளிப்கார்ட் பிளாக் உறுப்பினர்களுக்கும், தகுதியான பிளிப்கார்ட் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 8-ம் தேதியே இந்த சேல் ஓப்பனாகிவிடும். விற்பனைக்கு முன்னாடியே சில போன்களுக்கான ஆரம்பகால ஆஃபர்களை பிளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. இருந்தாலும், எல்லா மாடல்களுக்கான இறுதி விலையை இன்னும் அறிவிக்கவில்லை.

ஐபோன் 17-க்கு ஸ்பெஷல் ஆஃபர்

இந்த சேலில் எல்லாரோட கவனத்தையும் ஈர்த்திருக்கிற போன் ஐபோன் 17தான். பிளிப்கார்ட் விளம்பரத்தில் இந்த போனின் விலை ரூ.7X,XXX-னு சூசகமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சரியான விலையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஐபோன் 17-ன் 256 ஜிபி மாடல் இந்தியாவில் அறிமுகமானபோது அதோட ஆரம்ப விலை ரூ.82,900 ஆக இருந்தது. அப்புறம் இந்த மாடலின் அதிகாரப்பூர்வ விலை ரூ.99,900 ஆக உயர்ந்தது. அதனால, பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பிளிப்கார்ட் அறிவிக்கிற விலையை, தற்போதைய அதிகாரப்பூர்வ விலையான ரூ.99,900 கூடத்தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இறுதி விலையை நிறுவனம் சீக்கிரமே அறிவிக்கும்.

34
சாம்சங் போன்களுக்கும் ஆஃபர்
Image Credit : AI Generate (chatgpt.com)

சாம்சங் போன்களுக்கும் ஆஃபர்

சாம்சங் கேலக்ஸி S25, சாம்சங் கேலக்ஸி S25 FE ஆகிய மாடல்களுக்கும் ஸ்பெஷல் ஆஃபர் விலை கிடைக்கும். பிக் பில்லியன் டேஸ் விளம்பரத்தின் ஒரு பகுதியாக இந்த ரெண்டு போன்களையும் பிளிப்கார்ட் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ T5X 5G, ரியல்மி P4 லைட் 5G, ரியல்மி P4 5G, மோட்டோரோலா சிக்னேச்சர், மோட்டோ G37 பவர் போன்ற மாடல்களுக்கும் நல்ல விலை குறைப்பு இருக்கும்.

கூகுள் பிக்சல் 11 உட்பட பல மாடல்கள்

கூகுள் பிக்சல் 11, கூகுள் பிக்சல் 10a, AI+ நோவா 2 நியோ 5G, சாம்சங் கேலக்ஸி F70E 5G, ரியல்மி P4X 5G, இன்பினிக்ஸ் ஹாட் 60i 5G+, ஒன்பிளஸ் ஏஸ் 5G, லாவா விராட் V1 5G போன்ற மாடல்களும் இந்த சேல் லிஸ்டில் இருக்கு. ஒப்போ K14X 5G, நத்திங் போன் 4a போன்ற போன்களுக்கும் ஆஃபர்களை எதிர்பார்க்கலாம். பட்ஜெட் மற்றும் நடுத்தர விலை போன்களும் இந்த விற்பனையில் அதிகமாக இடம்பெறும்.

44
பேங்க் கார்டுகளுக்கு 10% வரை தள்ளுபடி
Image Credit : AI Generated (chatgpt.com)

பேங்க் கார்டுகளுக்கு 10% வரை தள்ளுபடி

போன்களின் விலை குறைப்பு மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களுக்கு பேங்க் ஆஃபர்களும் கிடைக்கும். குறிப்பிட்ட ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்துகிறவர்களுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கும் இந்த ஆஃபர் பொருந்தும்.

பிளிப்கார்ட்டின் சூப்பர் மணி மூலமாக முதல் பரிவர்த்தனை செய்கிறவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் கிடைக்கும் என அறிவித்துள்ளார்கள். பல ஸ்மார்ட்போன்களுக்கான இறுதி விலையை பிளிப்கார்ட் இன்னும் வெளியிடவில்லை. சேல் தொடங்குவதற்கு முன்னாடி இன்னும் பல ஆஃபர்களையும் விலை விவரங்களையும் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Flipkart
திறன் பேசி
சலுகைகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Recommended image2
AI Muse: AI நமக்காக போன் பேசுமா? Meta-வின் Muse செய்யப்போகும் அசத்தல் வேலை
Recommended image3
சுழலும் இறக்கைகள் இனி தேவையில்ல.... இன்டீரியர் அழகை பல மடங்கு கூட்டும் டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்கள்!
Related Stories
Recommended image1
Flipkart: வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. பிளிப்கார்ட் மெகா ஷாப்பிங் திருவிழா.. பிக் பில்லியன் டேஸ்!
Recommended image2
Flipkart: பொருளை இப்போ வாங்குங்க.. பணத்தை அப்புறம் கட்டுங்க! பிளிப்கார்ட்டின் 'Pay Later' மாஸ் வசதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved