- Home
- டெக்னாலஜி
- அடிமட்ட ரேட்டுக்கு கிடைக்கும் ஐபோன் 16 ப்ளஸ்.. விலையில் பெரும் சரிவு.. வாங்க இதுவே சரியான நேரம்
அடிமட்ட ரேட்டுக்கு கிடைக்கும் ஐபோன் 16 ப்ளஸ்.. விலையில் பெரும் சரிவு.. வாங்க இதுவே சரியான நேரம்
ரிலையன்ஸ் டிஜிட்டல், ஐபோன் 16 ப்ளஸ் மாடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம், ரூ.89,900 மதிப்புள்ள போனை ரூ.68,990-க்கு வாங்க முடியும், இது ரூ.21,000 சேமிப்பாகும். இந்த சலுகை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

ஐபோன் 16 ப்ளஸ் விலை குறைப்பு
இந்தியாவில் ஐபோன் வாங்குவதற்கான ஆர்வம் எப்போதும் மக்களிடையே அதிகம். புதிய iPhone 17 தொடரை ஆப்பிள் கடந்த மாதம் வெளியிட்டிருந்தாலும், அதன் விலை காரணமாக பலர் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஐபோன் வாங்க ஆசை இருந்தும், புதிய மாடலுக்கான பட்ஜெட் இல்லையா? அப்படியானால் Reliance Digital வெளியிட்டுள்ள சிறப்பு சலுகை உங்களுக்கு நல்ல வாய்ப்பு. 2024ல் அறிமுகமான ஐபோன் 16 ப்ளஸ் மாடலில் தற்போது மிகப் பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. அதிகப் பணம் செலவில்லாமல் பிரீமியம் ஐபோன் வாங்கலாம் என்பது தான் இந்த ஆஃபரின் முக்கிய நன்மை.
ஐபோன் 16 ப்ளஸ் அம்சங்கள்
ஐபோன் 16 ப்ளஸ் இந்தியாவில் முதலில் ரூ.89,900 விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது Reliance Digital தளத்தில் இது ரூ.68,990-க்கு பட்டியல் செய்யப்பட்டுள்ளது. இது 14% தள்ளுபடி, அதாவது ரூ.21,000 வரை சேமிக்க முடியும். இந்தச் சலுகை கருப்பு நிறம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடைய மாடலுக்கு பொருந்தும். ஒரே முறையாக முழு தொகையை செலுத்த விருப்பமில்லையெனில், ரூ.4,271 முதல் தொடங்கும் EMI வசதியும் வழங்கப்படுகிறது. ஆஃபர் மற்றும் EMI விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம்.
ஐபோன் 16 ப்ளஸ் தள்ளுபடி
ஐபோன் 16 ப்ளஸ்-ல் 6.7 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே, A18 சிப் செட், Apple Intelligence வசதி, 48MP மேயின் கேமரா, 12MP அல்ட்ரா-வைட் மற்றும் 12MP செல்ஃபி கேமரா ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் IP68 நீர் மற்றும் தூசி பாதுகாப்பும் உள்ளது. iPhone 16 128GB மாடல் இந்தியாவில் ரூ.79,900 விலையில் அறிமுகமானது. மேலும் ஐபோன் 16 ப்ளஸ் 128GB மாடல் ரூ.89,999 விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் iPhone 17 தொடர் வந்த பிறகு, 16 Plus மாடலில் விலை குறைந்துள்ளது. தற்போது கிடைக்கும் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்தி, பிரீமியம் ஐபோன் வாங்குவதற்கு இது மிகச் சிறந்த நேரம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

