- Home
- டெக்னாலஜி
- HMD Vibe 2 5G : பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. HMD Vibe 2 மொபைலுக்கு இந்தியாவே வெயிட்டிங்
HMD Vibe 2 5G : பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. HMD Vibe 2 மொபைலுக்கு இந்தியாவே வெயிட்டிங்
எச்எம்டி Global, தனது புதிய பட்ஜெட் 5G மாடலான எச்எம்டி Vibe 2 5G-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த போன் 6000 mAh பேட்டரி, 50MP AI கேமரா போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

எச்எம்டி Vibe 2 5G மொபைல்
ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில், எச்எம்டி Global தனது புதிய பட்ஜெட் 5G மாடலான எச்எம்டி Vibe 2 5G-ஐ மே 21ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான Vibe 5G மாடலின் அடுத்த கட்ட மேம்படுத்தப்பட்ட வடிவமாக வரும் இந்த போன், அதிக பேட்டரி திறன் மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் பயனர்கள் கவரும் வகையில் உள்ளது. ‘காஸ்மிக் லாவெண்டர்’ எனும் புதிய நிறத்தில் வெளியான டீசர், இளம் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

6000 mAh பேட்டரி
இந்த புதிய மாடல், இ-காமர்ஸ் தளமான Flipkart வழியாக விற்பனைக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது. அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக பக்கத்தில், போனின் டிசைன் மற்றும் சில முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பின்புறத்தில் சதுர வடிவில் பெரிய கேமரா மாட்யூல் இடம்பெற்றிருப்பது தற்போது பிரபலமாகிவரும் டிரெண்டை பிரதிபலிக்கிறது. 5,000 mAh பேட்டரியுடன் வந்த முந்தைய மாடலை விட, இந்த முறை 6,000 mAh பேட்டரி வழங்கப்படுவது முக்கிய முன்னேற்றமாக உள்ளது. மேலும், 50MP AI கேமரா இந்த போனின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும்.
4ஜி மாடலும் வெளிவருகிறது
இதனுடன் சேர்த்து, 4G மாடலும் வரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘எச்எம்டி Vibe 2 4G’ என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த மாடலில் 6.75 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற வாய்ப்புள்ளது.
256ஜிபி ஸ்டோரேஜ்
மேலும், Unisoc T7200 சிப் செட், 4ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி பிரதான கேமரா, 2எம்பி துணை சென்சார், 5எம்பி செல்ஃபி கேமரா போன்ற அம்சங்களும் இதில் உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5,000 mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் வசதி போன்றவை இந்த 4G மாடலில் வழங்கப்படலாம். இவ்வாறு, 5G மற்றும் 4G இரு மாடல்களையும் கொண்டு, எச்எம்டி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

