MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்

ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்

மாருதி சுசுகி மே 2026 மாதத்திற்காக சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.2.15 லட்சம் வரை மொத்த சலுகைகளை பெறலாம். இதில் விலை குறைப்பு, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் ஆஃபர்கள் அடங்கும்.

2 Min read
Author : Raghupati R
Published : May 08 2026, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாருதி கார் ஆஃபர்
Image Credit : Asianet News

மாருதி கார் ஆஃபர்

மே 2026 மாதம் புதிய கார் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. மாருதி சுசுகி தனது பிரபலமான பல மாடல்களுக்கு இந்த மாதம் பெரிய அளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.2.15 லட்சம் வரை பயன்கள் கிடைக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, மாருதி சுசுகி இன்விக்டோ போன்ற மாடல்கள் இதில் அடங்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மாருதி சுசுகி தள்ளுபடி
Image Credit : Nexa Cars Website

மாருதி சுசுகி தள்ளுபடி

இந்த சலுகைகள் வெறும் விலை குறைப்பாக மட்டும் இல்லாமல், கம்பெனி பல வகையான ஆஃபர்களையும் இணைத்துள்ளது. கஸ்டமர் டிஸ்கவுண்ட், டீலர் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், ஸ்க்ராப்பேஜ் சலுகை மற்றும் கார்ப்பரேட் ஆஃபர் போன்றவை இதில் உள்ளன. இந்த அனைத்து சலுகைகளும் மே மாத இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

Related Articles

Related image1
ரூ.25,000 மட்டுமே... 55 கிமீ ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. உடனே வாங்கிடுங்க!
Related image2
அச்சச்சோ..! ஸ்கூட்டர் விலை அதிரடி உயர்வு.. யமஹாவின் புதிய விலைப்பட்டியல் உள்ளே
35
மாருதி சுசுகி பிரெஸ்ஸா
Image Credit : Nexa Cars Website

மாருதி சுசுகி பிரெஸ்ஸா

மாருதி சுசுகி பிரெஸ்ஸா கார் மீது அதிகபட்சம் ரூ.55,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான இந்த எஸ்யூவி, ரூ.8.26 லட்சம் முதல் ரூ.13.01 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த மாடல், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வருகிறது. சிஎன்ஜி வேரியண்டும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.

45
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா
Image Credit : Maruti Suzuki

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா

மேலும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா ஹைபிரிட் மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.85 லட்சம் வரை ரோடு டாக்ஸ் சேமிப்பு கிடைக்கும். இதற்கு மேலாக ரூ.90,000 வரை கூடுதல் சலுகையும், 5 ஆண்டுகள் இலவச எக்ஸ்டெண்டட் வாரண்டியும் வழங்கப்படுகிறது. பெட்ரோல், ஹைபிரிட், சிஎன்ஜி ஆகிய மூன்று ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கிறது.

55
கார் விலை குறைப்பு
Image Credit : Maruti Suzuki

கார் விலை குறைப்பு

இந்த மாதத்தில் அதிகபட்ச சலுகை வழங்கப்படும் மாடல் மாருதி சுசுகி இன்விக்டோ ஆகும். இந்த எம்பிவி கார் மீது ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.24.97 லட்சம் முதல் ரூ.28.60 லட்சம் வரையிலான இந்த கார், 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் மூலம் 184 hp சக்தி உற்பத்தி செய்கிறது. நீண்ட பயணங்களுக்கு ஏற்ற வசதிகளுடன், ஸ்மூத் டிரைவிங் அனுபவத்தை வழங்கும் மாடலாக இது விளங்குகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி கார்
சலுகைகள்
தள்ளுபடி
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை செக் பண்ணலைனா சிக்கல்தான்..
Recommended image2
Yamaha R15 vs KTM RC 160.. எந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாஸ் தெரியுமா? முழு விபரம் இதோ
Recommended image3
Old Car Rules: பழைய கார் இருக்கா? இந்த ரூல்ஸ் தெரியலைனா ஃபைன் கன்ஃபார்ம்..!
Related Stories
Recommended image1
ரூ.25,000 மட்டுமே... 55 கிமீ ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. உடனே வாங்கிடுங்க!
Recommended image2
அச்சச்சோ..! ஸ்கூட்டர் விலை அதிரடி உயர்வு.. யமஹாவின் புதிய விலைப்பட்டியல் உள்ளே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved