அச்சச்சோ..! ஸ்கூட்டர் விலை அதிரடி உயர்வு.. யமஹாவின் புதிய விலைப்பட்டியல் உள்ளே
யமஹா மோட்டார் இந்தியா, தனது ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய விலை அறிவிப்பு வாங்க நினைப்பவர்களுக்கு கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

யமஹா ஸ்கூட்டர் விலை உயர்வு
இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், யமஹா ஃபேஸினோ 125 எப்ஐ ஹைப்ரிட் மாடலின் விலையை யமஹா மோட்டார் இந்தியா மேம்படுத்தியுள்ளது. புதிய அப்டேட்டின்படி, இந்த ஸ்கூட்டரின் விலை அதிகபட்சம் ரூ.1,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட்களில் இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற யமஹா ஸ்கூட்டர் மாடல்களின் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஃபேஸினோ விலை
யமஹாவின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஃபேஸினோ 125 டிஸ்க் வேரியண்ட் தற்போது ரூ.87,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. அதேசமயம், அதிக வசதிகள் கொண்ட எஸ் வேரியண்ட் ரூ.96,200 (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேரியண்ட் மற்றும் கலர் ஆப்ஷன்களைப் பொறுத்து விலை மாறுபடுகிறது.
ஸ்கூட்டர் விலை மாற்றம்
புதிய விலை மாற்றம் முக்கியமாக மிட் மற்றும் டாப் வேரியண்ட்களில் சுமார் ரூ.1,000 உயர்வாக பதிவாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் மேட் ரெட், சியான் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், டார்க் மேட் ப்ளூ, கூல் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மேட் காப்பர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. லைட்வெய்ட் வடிவமைப்பு மற்றும் ஹைப்ரிட் பிராண்டிங் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக தொடர்ந்து நீடிக்கின்றன.
ஃபேஸினோ 125 அம்சங்கள்
இந்த விலை உயர்வுடன் எந்த புதிய டிசைன் அல்லது மெக்கானிக்கல் அப்டேட்களும் சேர்க்கப்படவில்லை. ஃபேஸினோ 125 வழக்கம்போல 125cc ஏர்-கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்ஷன் என்ஜினுடன் வருகிறது. இது யமஹா-வின் Smart Motor Generator (SMG) மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸினோ 125 வசதிகள்
சுமார் 8.08 ஹார்ஸ்பவர் சக்தியும், 10.3 Nm டார்க் உற்பத்தியும் இந்த என்ஜின், சைலண்ட் ஸ்டார்ட் மற்றும் டிராஃபிக் நிலைகளில் ஆட்டோ ஸ்டாப்-ஸ்டார்ட் வசதிகளையும் வழங்குகிறது. 99 கிலோ எடையுடன், இந்த டிரம் வேரியண்ட் தனது பிரிவில் மிக இலகுவான ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். மேலும் புளூடூத் இணைப்பு (Y-Connect), LED ஹெட்லைட், சைடு-ஸ்டாண்ட் எஞ்சின் கட்-ஆஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற நவீன அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

