- Home
- Auto
- ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்: சிட்டி டிரைவிங்கிற்கு எது பெஸ்ட்?
ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்: சிட்டி டிரைவிங்கிற்கு எது பெஸ்ட்?
இந்தியாவில் அதிகரித்து வரும் நகரப் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்களின் விவரங்களை பற்றி பார்ப்போம்.

குறைந்த விலை ஆட்டோமேட்டிக் கார்கள்
நகரங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி கியர் மாற்றுவது மற்றும் கிளட்சை அழுத்துவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால், அதிக பட்ஜெட் ஒதுக்காமல் குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் (Automated Manual Transmission - AMT) கார்களை வாங்க பலரும் விரும்புகின்றனர். இந்தியச் சந்தையில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 மலிவு விலை ஆட்டோமேட்டிக் கார்களின் விவரங்களை பற்றி பார்போம்.
மாருதி எஸ்-பிரஸ்ஸோ (Maruti S-Presso)
ஆரம்ப விலை: ரூ.3.49 - ரூ.4.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
சிறப்பம்சங்கள் - இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார் இதுவாகும். VXI (O) மற்றும் VXI+ (O) வேரியன்ட்களில் 1.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் AMT வசதி வழங்கப்படுகிறது. இதன் நிமிர்ந்த இருக்கை அமைப்பு (Upright seating) ஓட்டுநருக்குச் சிறந்த பார்வையைக் கொடுக்கிறது. பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு.
ரெனால்ட் க்விட் (Renault Kwid)
ஆரம்ப விலை - ரூ.4.52 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம்)
சிறப்பம்சங்கள்: மாருதி கார்களுக்கு ஒரு நல்ல மாற்றாக விளங்கும் இந்த கார், அகலமான தோற்றத்தையும் சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டுள்ளது. இதன் 1.0-லிட்டர் எஞ்சின் மற்றும் AMT சேர்க்கை, குறைந்த வேகத்தில் சீரான ஓட்டுநர் அனுபவத்தைத் தருகிறது. கரடுமுரடான நகரச் சாலைகளுக்கு ஏற்றது.
மாருதி ஆல்டோ K10 (Maruti Alto K10)
ஆரம்ப விலை - ரூ.3.69 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம்)
சிறப்பம்சங்கள் - 1.0-லிட்டர் 3-சிலிண்டர் எஞ்சினுடன் கூடிய இந்த காரின் உயர் வேரியன்ட்களில் AMT வசதி கிடைக்கிறது. ஏர்பேக்குகள் உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளுடன் வரும் இந்த கார், குறுகிய சந்துகளிலும் சுலபமாக பார்க் செய்யக்கூடிய கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மாருதி செலரியோ (Maruti Celerio)
ஆரம்ப விலை - ரூ.4.69 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம்)
சிறப்பம்சங்கள் - எரிபொருள் சிக்கனத்திற்கு பெயர் பெற்ற இந்த ஹேட்ச்பேக் கார், 1.0-லிட்டர் AMT எஞ்சினில் லிட்டருக்கு 26 கி.மீக்கும் அதிகமான மைலேஜைத் தருகிறது. நெரிசல் மிகுந்த சாலைகளில் இலகுவாகச் செல்லவும், 4 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கக்கூடிய இடவசதியையும் இது வழங்குகிறது.
மாருதி வேகன் ஆர் (Maruti Wagon R)
ஆரம்ப விலை - ரூ.4.98 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம்)
சிறப்பம்சங்கள் - 1.0-லிட்டர் மற்றும் 1.2-லிட்டர் ஆகிய 2 பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளிலும் AMT வசதியுடன் கிடைக்கிறது. சிறந்த தலைப்பகுதி இடவசதி (Headroom) மற்றும் கேபின் இடவசதி கொண்டதால் குடும்பங்களுக்கு ஏற்றது. மாருதியின் பரவலான சேவை நெட்வொர்க் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவை இதன் கூடுதல் பலங்களாகும்.





