- Home
- டெக்னாலஜி
- இனி எல்லோர் வீட்டிலும் பிஎஸ்என்எல் தான்.. BSNL 5G வரப்போகுது! செம அப்டேட்.. அலறும் ஜியோ, ஏர்டெல்!
இனி எல்லோர் வீட்டிலும் பிஎஸ்என்எல் தான்.. BSNL 5G வரப்போகுது! செம அப்டேட்.. அலறும் ஜியோ, ஏர்டெல்!
BSNL 5G: இந்தியாவில் மலிவு விலையில் ரீசார்ஜ் பிளான்களை செயல்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி அப்டேட் கொடுத்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் அதிகரிக்கும் மவுசு
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் குறைந்த விலையில் சூப்பர் திட்டங்களை கொண்டு வருவதன்மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து விலையை அதிகரித்து வருவதால் பிஎஸ்என்எல்க்கு மவுசு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
பிஎஸ்என்எல் 4G டவர்கள்
இப்போது நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் இடங்களில் 4G டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து இந்தியா முழுவதும் மூலை முடுக்கெல்லாம் 4G டவர்கள் நிறுவ பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையில் கலக்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் எப்போது 5ஜி சேவையை கொண்டு வரும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பிஎஸ்என்எல் 5ஜி
இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த 6 மாதங்களுக்குள் 5G சேவையை சாஃப்ட் லான்ச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ராபர்ட் ரவி தெரிவித்துள்ளார். சாஃப்ட் லான்ச் என்பது சோதனை ஓடம் தொடர்பானதை குறிக்கிறது. அதாவது முதலில் முக்கியமான பகுதிகளில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை சோதனை ஓட்டம் முறையில் தொடங்கப்படும் என ராபர்ட் ரவி கூறியுள்ளார்.
4ஜி டவர்களை 5ஜி டவர்களாக மாற்ற முடியும்
பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் முதன்முதலில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக Network-as-a-Serviceஎன்ற தொழில்நுட்ப மாதிரி பயன்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவிய 4ஜி டவர்கள் அனைத்தும் 5G-ready தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவையாகும். ஆகவே சாப்ட்வேர் அப்கிரேடு மூலமாகவே 4ஜி டவர்களை 5ஜி டவர்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
சென்னை, பெங்களூருவிலும் சோதனை ஓட்டம்
பிஎஸ்என்எல் 5ஜி சோதனை ஓட்டம் டெல்லியில் வெற்றிகரமாக அமைந்தால் பின்னர் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டு பின்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

