MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • BSNL Job: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. ரூ.50,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?

BSNL Job: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. ரூ.50,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?

BSNL Recruitment 2026: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 120 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Feb 05 2026, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பிஎஸ்என்எல் மவுசு அதிகரிப்பு
Image Credit : X

பிஎஸ்என்எல் மவுசு அதிகரிப்பு

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தாலும், மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுக்கு (BSNL) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதே இதற்கு காரணமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை
Image Credit : Getty

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் டெலிகாம் மற்றும் நிதித் துறைகளில் காலியாக உள்ள 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (SET) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 மொத்தம் 120 பணியிடங்களில் டெலிகாம் பிரிவுக்கு 95 இடங்களும், நிதி பிரிவுக்கு 25 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு இன்று (பிப்ரவரி 5) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 7ம் தேதி ஆகும்.

கல்வித்தகுதி என்ன?

இதில் டெலிகாம் பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மின்னணுவியல், தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின் பொறியியல் அல்லது இது தொடர்பான துறைகளில் முழுநேர பி.இ/பி.டெக் (BE/BTech) முடித்திருக்க வேண்டும். 

இறுதியாண்டு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.

Related Articles

Related image1
BSNL: ஜியோ, ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்.. வெறும் 200 ரூபாயில் டேட்டா மழை.. செம ஆபர்!
Related image2
ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக மாறுகிறதா பிஎஸ்என்எல்? கிராமங்கள் தோறும் இனி இன்டர்நெட் புரட்சி! வெளியான அதிரடி அறிவிப்பு!
33
வயது தளர்வு உண்டா?
Image Credit : Getty

வயது தளர்வு உண்டா?

நிதிப்பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிஏ பட்டய படிப்பு அல்லது செலவு மேலாண்மை கணக்காளர் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு எப்படி இருக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் பொது அறிவு அடங்கிய கணினி வழி தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இந்த பணியியில் சேர்பவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.24,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும். 

இது தவிர அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவ வசதிகளும் உண்டு. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் bsnl.co.in என்ற பிஎஸ்என்எல்லின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை இந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
வேலைவாய்ப்பு
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Jobs: 10வது பாஸ் போதும்! ரயில்வேயில் 6500+ வேலைகள்... சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
Recommended image2
Govt Scheme: தனியார் துறை பணியாளர்களுக்கு அரசு தரும் ரூ.15000 உதவித்தொகை.! உடனே விண்ணப்பியுங்கள்.!
Recommended image3
Railway Jobs 2026: ரயில்வேயில் 6,500+ காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு போதும்! எப்படி விண்ணப்பிப்பது?
Related Stories
Recommended image1
BSNL: ஜியோ, ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்.. வெறும் 200 ரூபாயில் டேட்டா மழை.. செம ஆபர்!
Recommended image2
ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக மாறுகிறதா பிஎஸ்என்எல்? கிராமங்கள் தோறும் இனி இன்டர்நெட் புரட்சி! வெளியான அதிரடி அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved