- Home
- டெக்னாலஜி
- BSNL: ஜியோ, ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்.. வெறும் 200 ரூபாயில் டேட்டா மழை.. செம ஆபர்!
BSNL: ஜியோ, ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்.. வெறும் 200 ரூபாயில் டேட்டா மழை.. செம ஆபர்!
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.300க்கு கீழாக அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டாவை வாரி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் பிளான்கள்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் அதன் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்காக தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. ஏனெனில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் கோடிக்கணக்கான பயனர்களுக்கு மலிவான விலையில் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்களை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.300க்கு கீழாக அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டாவை வாரி வழங்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.215 பிளான்
பிஎஸ்என்எல்லின் ரூ.215 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக உள்ளது. இந்தத் திட்டம் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த பிளான் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் இலவசமாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் ஹார்டி கேம்ஸ், சேலஞ்சர் அரினா கேம்ஸ், கேமியான், ஆஸ்ட்ரோசெல், கேமியம், லிஸ்ட்ன் பாட்காஸ்ட், ஜிங் மியூசிக், வாவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் உள்ளிட்ட பல இலவச நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.228 பிளான்
பிஎஸ்என்எல் ரூ.228 திட்டம் ஒரு மாத வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களை வாரி வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.239 பிளான்
BSNL ரூ.239 திட்டம் 1 மாதம் வேலிடிட்டியை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்படி உங்களுக்கு தினமும் 2GB டேட்டா வரம்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் கால்ஸ் வசதியையும் பெற முடியும்.
BSNL ரூ.269 பிளான்
பிஎஸ்என்எல் ரூ.269 பிளான் தினமும் 2GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளான் 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் STD கால்ஸ்களை மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் Arena Games, Eros Now இன் கடினமான மொபைல் கேமிங் சேவை, Lokdhun மற்றும் Zing சந்தாக்கள் ஆகிய சலுகைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல், வோடோபோன், ஜியோவை விட குறைவான விலை
நாம் மேலே சொன்ன இந்த திட்டங்கள் அனைத்தும் 300 ரூபாய்க்குள்ளான விலையில் அன்லிமிடெட் கால்ஸ், டேட்டா மற்றும் டேட்டாக்களை வாரி வழங்குகின்றன. இதேயே ஏர்டெல், வோடோபோன், ஜியோ பிளான்களை எடுத்துக் கொண்டால் வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ. 299 விலையில் தினமும் 1GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் வேலிடிட்டி 28 நாட்கள் கொண்ட பிளானை வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.299 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் தினமும் 1GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதேபோல் ஜியோவில் ரூ.299 திட்டம் தினமும் 1.5GB டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த பிளான்கள் பிஎஸ்என்எல்லை விட அதிக விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

