MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • BSNL: ரூ.200 கூட இல்ல.. 42 நாள் வேலிடிட்டி.. டேட்டா + கால்ஸ்.. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்.. செம பிளான்!

BSNL: ரூ.200 கூட இல்ல.. 42 நாள் வேலிடிட்டி.. டேட்டா + கால்ஸ்.. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்.. செம பிளான்!

BSNL Best Budget Plan: பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் சூப்பர் பிளான் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த பிளானில் என்னென்ன சலுகைகள் உள்ளன? என்பது குறித்து பார்க்கலாம்.  

1 Min read
Author : Rayar r
Published : Feb 09 2026, 10:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பிஎஸ்என்எல் பிளான்
Image Credit : stockPhoto

பிஎஸ்என்எல் பிளான்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்ததிலிருந்து, பெரும்பாலான பயனர்கள் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் திரும்பி வருகின்றனர். BSNL ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிகவும் மலிவானவை. அதனால்தான் பெரும்பாலான பயனர்கள் BSNL திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.

பிஎஸ்என்எல் பிரிபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் அதன் மலிவு மற்றும் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்களால் பயனர்களின் இதயங்களை தொடர்ந்து வென்று வருகிறது. நீங்கள் ஒரு BSNL வாடிக்கையாளராக இருந்து உங்களுக்காக ஒரு மலிவான திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால் பிஎஸ்என்எல் வழங்கும் சூப்பரான பிரிபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். ரூ.197 விலை கொண்ட இந்த திட்டம் மொத்தம் 42 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
42 நாட்கள் வேலிடிட்டி
Image Credit : stockPhoto

42 நாட்கள் வேலிடிட்டி

இந்த 42 நாட்களுக்கு மொத்தம் 300 நிமிட இலவச உள்ளூர் போன் கால்ஸ் மற்றும் எஸ்டிடி போன் கால்ஸ் செய்ய முடியும். இந்த பிளான் செல்லுபடியாகும் 42 நாட்களுக்கும் 4 ஜிபி அதிவேக டேட்டா உங்களுக்கு கிடைக்கும். இந்த டேட்டா வரம்பு தீர்ந்த பிறகும், 40Kbps வேகத்தில் டேட்டா பயன்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 100 எஸ்எம்எஸ் சலுகை உங்களுக்கு கிடைக்கும்.

சிம் கார்டை நீண்ட நாள் செயலில் வைக்கலாம்

போன் கால்ஸ் இலவச அழைப்பு முடிந்தபிறகு உள்ளூர் அழைப்பு நிமிடத்திற்கு ரூ.1, எஸ்டிடி அழைப்பு நிமிடத்திற்கு ரூ.1.30 கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் ஒரு mbக்கு 25 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த விலையில் சிம் கார்டை நீண்ட நேரம் செயலில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இந்த பிளான் பொருத்தமாக இருக்கும்.

Related Articles

Related image1
BSNL: ஜியோ, ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்.. வெறும் 200 ரூபாயில் டேட்டா மழை.. செம ஆபர்!
Related image2
BSNL Job: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. ரூ.50,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?
33
இந்த திட்டம் யாருக்கு ஏற்றது?
Image Credit : X

இந்த திட்டம் யாருக்கு ஏற்றது?

குறைந்த டேட்டா பயன்பாடு உள்ளவர்களுக்கும், தேவைப்படும்போது மட்டும் போன் கால்ஸ் செய்பவர்களுக்கும் இந்த திட்டம் மிகச்சிறந்த தேர்வாக அமையும். மேலும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடோபோன் ஆகிய தனியார் நிறுவனங்களை விட இந்த பிளானின் விலை குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற திட்டமாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல் டேட்டா திட்டம்
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vivo Price Hike: புதிய போன் வாங்கப் போறீங்களா? விவோ உயர்த்திய புதிய விலைகள்.. இதோ லிஸ்ட்!
Recommended image2
Nothing Phone 3 Price Cut: நத்திங் போன் 3-க்கு எதிர்பாராத விலை குறைப்பு.. ஸ்டாக் தீரும் முன் வாங்குங்க.!
Recommended image3
Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
BSNL: ஜியோ, ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்.. வெறும் 200 ரூபாயில் டேட்டா மழை.. செம ஆபர்!
Recommended image2
BSNL Job: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. ரூ.50,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved