MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • இலவசமாக Hotstar வேணுமா.. இதோ உங்களுக்கான அற்புத பிளான்!

இலவசமாக Hotstar வேணுமா.. இதோ உங்களுக்கான அற்புத பிளான்!

ஐபிஎல் பார்க்க இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைத் தேடுகிறீர்களா? ஏர்டெல், வோடபோன்-ஐடியா நெட்வொர்க்கில் இலவச OTT சந்தா உள்ளன. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம். 

2 Min read
Dinesh TG
Published : Feb 27 2023, 08:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வரும் மார்ச் 2023 முதல் பிரீமியர் லீக் 2023 சீசன் போட்டிகளை ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.  இந்த நேரத்தில், முன்னனி செல்போன் ஆபரரேட்டர்கள் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களில் இருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆஃபரை நீக்கியுள்ளது. குறிப்பாக ஜியோவில் பயனர்கள் நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த ஹாட் ஸ்டார் ஆஃபர்கள் சில இல்லாததால் சற்று ஏமாற்றத்துடன் உள்ளனர். ஆனால் உங்களிடம் ஏர்டெல் அல்லது வோடபோன்-ஐடியா போஸ்ட்பெய்ட் சிம் இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

24

Airtel மற்றும் Vodafone-Idea (Vi) நெட்வொர்க்கில் போஸ்ட்பெய்டு மொபைல் ரீசார்ஜ் பிளான்களுடன் Disney+ Hotstar இலவச சந்தாவைப் பெறலாம். இந்த இரண்டு நெட்வொர்க்கிலும் டேட்டா மற்றும் வாய்ஸ்கால் பலன்களுடன் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களையும் இலவசமாக வழங்குகின்றனர். 
 

34

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம்:

ரூ.499: இந்த பிளானில் 75ஜிபி டேட்டா ரோல்ஓவர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ இலவச சந்தா, அன்லிமிடேடட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கிறது.

ரூ 999: இந்த திட்டத்தின் கீழ், 1 வழக்கமான சிம் கார்டும், அதனுடன் 3 நம்பர்களையும் ஃபேமிலி ஆட்-ஒன் என்ற முறையில் இணைக்கலாம். இதனால் மொத்தம் 100 ஜிபி டேட்டா ரோல்ஓவர் கிடைக்கும். அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. OTT ஐப் பொறுத்தவரை, இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கிடைக்கிறது.

ரூ. 1199: மேலே உள்ள திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்திலும் 1 வழக்கமான சிம், 3 இலவச குடும்ப ஆட்-ஆன் வசதி, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் பேசிக் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. அத்துடன் 150ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Amazon Alexa-வுக்கு ஒரு நாளைக்கு 21,600 முறை ‘ஐ லவ் யூ சொல்லும்’ இந்தியர்கள்!

ரூ. 1499: இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 4 இலவச ஃபேமிலி ஆட் ஆன் வசதி, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடேட் வாய்ஸ் கால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், அமேசான் பிரைம் வீடியோ. நெட்ஃபிளிக்ஸ் பேசிக் ஆகியவை வழங்கப்படுகிறது.

44

Vi - போஸ்ட்பெய்டு திட்டம்:

ரூ. 501: இந்த திட்டத்தில், 90ஜிபி டேட்டா ரோல்ஓவர், வரம்பற்ற அழைப்பு, ஒரு மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் இலவச சந்தா ஆகியவற்றை Vi கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த திட்டம் Amazon Prime, Vi Movies மற்றும் TV, Hungama Music மற்றும் பலவற்றிற்கான சந்தாக்களையும் வழங்குகிறது.

Snapchat Update: இனி அட்டகாசமான ஆடியோவை அசால்ட்டாக சேர்க்கலாம்!

ரூ.701: இந்தத் திட்டத்தில் வரம்பற்ற டேட்டா, அழைப்பு மற்றும் 3000 எஸ்எம்எஸ் வழங்குகிறது. Disney+ Hotstar Super, Amazon Prime மற்றும் பலவற்றிற்கான இலவச சந்தாவும் இதில்  உள்ளது.

ரூ 1101: இந்த திட்டம் Vi இன் மிகவும் விலையுயர்ந்த போஸ்ட்பெய்ட் திட்டமாக உள்ளது.  இந்த திட்டத்தில் அன்லிமடேட் டேட்டா, வாய்ஸ் கால் , மாதத்திற்கு 3000 SMS, Amazon Prime, Disney+ Hotstar Superக்கான இலவச சந்தா ஆகியவை  வழங்கப்படுகிறது.
 

About the Author

DT
Dinesh TG
ஏர்டெல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved