MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • WhatsApp: இனி நள்ளிரவு 12 மணிக்கு நீங்க தூங்கினாலும் மெசேஜ் போகும்..! WhatsApp-ல் மாஸ் அப்டேட்..!

WhatsApp: இனி நள்ளிரவு 12 மணிக்கு நீங்க தூங்கினாலும் மெசேஜ் போகும்..! WhatsApp-ல் மாஸ் அப்டேட்..!

இனி நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப நள்ளிரவு 12 மணி வரை விழித்திருக்க வேண்டிய அவசியமில்லை! நீங்கள் முன்கூட்டியே டைப் செய்து வைக்கும் மெசேஜ், குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே சென்றடையும் புதிய வசதியை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.

3 Min read
Author : Velmurugan s
Published : Nov 26 2026, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
WhatsApp Scheduled Messages: என்ன இந்த புதிய வசதி?
Image Credit : This is a representative image generated using ChatGPT

WhatsApp Scheduled Messages: என்ன இந்த புதிய வசதி?

இதுவரை WhatsApp-ல் ஒரு மெசேஜை அனுப்ப வேண்டும் என்றால், அந்த நேரத்தில் நாமே Send பட்டனை அழுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தானாகச் செல்லும் வகையில் மெசேஜ்களை அமைக்கும் வசதி நேரடியாக WhatsApp-ல் இல்லை.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் Scheduled Messages வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது WhatsApp. நவம்பர் 25, 2026 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பயனர்கள் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரை முன்கூட்டியே மெசேஜ்களைத் திட்டமிடலாம்.

இதில் Text மட்டுமின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பும்படி அமைக்க முடியும். தனிப்பட்ட சாட்கள் மற்றும் Group Chats என இரண்டிலும் இந்த வசதி செயல்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
WhatsApp-ல் மெசேஜ்களை Schedule செய்வது எப்படி?
Image Credit : Asianet News

WhatsApp-ல் மெசேஜ்களை Schedule செய்வது எப்படி?

இந்த வசதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. உங்கள் WhatsApp கணக்கில் இந்த அப்டேட் கிடைத்திருந்தால் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

1. முதலில் WhatsApp செயலியைத் திறக்கவும்.

2. மெசேஜ் அனுப்ப வேண்டிய தனிப்பட்ட Chat அல்லது Group Chat-க்குச் செல்லவும்.

3. நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜை Type செய்யவும்.

4. உடனே Send பட்டனை அழுத்தாமல், அதை நீண்ட நேரம் அழுத்திப் பிடிக்கவும் (Long Press).

5. அப்போது மெசேஜ் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யும் வசதி தோன்றும்.

6. உங்களுக்குத் தேவையான தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யவும்.

7. இறுதியாக உறுதிப்படுத்தும் பட்டனை அழுத்தினால் மெசேஜ் Schedule செய்யப்பட்டுவிடும்.

நீங்கள் தேர்வு செய்த நேரத்தில் WhatsApp தானாகவே அந்த மெசேஜை அனுப்பிவிடும்.

35
எந்தெந்த மெசேஜ்களை Schedule செய்யலாம்?
Image Credit : Asianet News

எந்தெந்த மெசேஜ்களை Schedule செய்யலாம்?

இந்த புதிய வசதியில் மூன்று வகையான உள்ளடக்கங்களை அனுப்ப முடியும்.

• Text Messages: பிறந்தநாள் வாழ்த்துகள், தேர்வு வாழ்த்துகள், முக்கிய நினைவூட்டல்கள்.

• Photos: குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை அனுப்பலாம்.

• Videos: வீடியோவையும் முன்கூட்டியே தேர்வு செய்து அனுப்பலாம்.

உதாரணமாக, நண்பரின் பிறந்தநாள் நள்ளிரவு 12 மணிக்கு வருகிறது என்றால், அதற்கு முன்பே வாழ்த்து மெசேஜை எழுதி வைத்து சரியான நேரத்தைத் தேர்வு செய்யலாம். நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் குறித்த நேரத்தில் மெசேஜ் சென்றுவிடும்.

போன் Switch Off செய்யப்பட்டிருந்தாலும் மெசேஜ் செல்லுமா?

இந்த வசதியின் முக்கியமான சிறப்பம்சமே இதுதான். மெசேஜ் அனுப்புவதற்காக குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் போனை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

WhatsApp அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளபடி, போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது பேட்டரி தீர்ந்து போயிருந்தாலும் Schedule செய்த மெசேஜ் தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் சென்றடையும். மேலும், மற்ற தனிப்பட்ட உரையாடல்களைப் போலவே இந்த மெசேஜ்களும் End-to-End Encryption பாதுகாப்புடன் இருக்கும்.

45
Schedule செய்த மெசேஜை பார்க்கவும், Delete செய்யவும் முடியுமா?
Image Credit : X

Schedule செய்த மெசேஜை பார்க்கவும், Delete செய்யவும் முடியுமா?

ஒரு மெசேஜை முன்கூட்டியே Schedule செய்துவிட்டால், அதனை மாற்ற முடியாதா என்ற சந்தேகம் வரலாம்.

இதற்கும் WhatsApp வழிவகை செய்துள்ளது. நீங்கள் அனுப்புவதற்காகக் காத்திருக்கும் Scheduled Messages பட்டியலைப் பார்க்கலாம். ஒருவேளை திட்டம் மாறிவிட்டால், மெசேஜ் சென்றடைவதற்கு முன்பாகவே அதனை Delete செய்யவும் முடியும்.

உதாரணமாக, நண்பருக்கு காலை 8 மணிக்கு அனுப்ப வேண்டிய நினைவூட்டல் தேவையில்லை என்று முடிவு செய்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அதை நீக்கிவிடலாம். ஏற்கெனவே Schedule செய்த மெசேஜை Edit செய்யவோ, அதன் நேரத்தை மாற்றவோ முடியும் என்று WhatsApp இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

55
இந்த வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Image Credit : X

இந்த வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும்?

WhatsApp இந்த வசதியை உலகம் முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. Android மற்றும் iPhone ஆகிய இரண்டு தளங்களிலும் வரும் வாரங்களில் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, உங்கள் WhatsApp-ல் உடனடியாக இந்த வசதி தெரியவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. படிப்படியான அறிமுகம் என்பதால் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காமல் இருக்கலாம்.

உங்கள் செயலியைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள். வசதி உங்கள் கணக்கிற்கு வந்ததும் Send பட்டனை நீண்ட நேரம் அழுத்திப் பார்த்து பயன்படுத்தலாம்.

WhatsApp பயனர்களுக்கு என்ன பயன்?

இந்த வசதி சாதாரண பயனர்களுக்கு மட்டுமின்றி அலுவலகப் பணிகளுக்காக WhatsApp பயன்படுத்துபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

• பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகளை மறக்காமல் அனுப்பலாம்.

• அலுவலகக் குழுக்களில் முக்கிய அறிவிப்புகளை முன்கூட்டியே தயார் செய்யலாம்.

• தேர்வு, நேர்காணல் போன்றவற்றுக்கான நினைவூட்டல்களை அனுப்பலாம்.

• வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சரியான நேரத்தில் தகவல் அனுப்பலாம்.

நீண்ட நாட்களாக பயனர்கள் எதிர்பார்த்திருந்த இந்த வசதி, WhatsApp பயன்பாட்டில் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் மேம்படுத்தல்
வாட்ஸ்அப் அம்சங்கள்
தொழில்நுட்பம்
 
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Offline Mobile Tips: நெட்வொர்க் இல்லாத இடத்திலும் இனி நோ டென்ஷன்! பயணத்திற்கு முன் செய்ய வேண்டியவை..
Recommended image2
Honor New launching: ஹானர் மேஜிக் 9 ப்ரோ மேக்ஸ்... சினிமா தர வீடியோ, பிரம்மாண்ட பேட்டரியுடன் அறிமுகம்!
Recommended image3
Claude AI Viral Chat: 1 லட்சம் வரை எண்ண சொன்ன பயனரை மிரட்டிய ஏ.ஐ; இணையத்தை கலக்கும் வைரல் சாட்டின் பின்னணி என்ன?
Related Stories
Recommended image1
ஒரே போனில் 2 WhatsApp..! இனி 2 போன் தேவையில்லை.. இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க..!
Recommended image2
WhatsApp Web: உங்க WhatsApp-ஐ யாரோ பார்க்கிறாங்களா? இந்த 8 செட்டிங்ஸை உடனே செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved