Amazon Alexa-வுக்கு ஒரு நாளைக்கு 21,600 முறை ‘ஐ லவ் யூ சொல்லும்’ இந்தியர்கள்!
அமேசான் அலெக்ஸாவின் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அலெக்ஸா குறித்த சுவாரசியமான முக்கிய விவரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து இங்கு காணலாம்.
இந்தியாவில், Amazon Alexa மிகவும் பிரபலமான வாய்ஸ் அசிஸ்டெண்ட் சாதனமாகும்.. இந்த ஆண்டு அலெக்சாவின் ஐந்தாவது பிறந்தநாள் வருகிறது. அதாவது, அலெக்ஸா அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இந்த சந்தர்ப்பத்தில், அலெக்ஸாவின் அபார வளர்ச்சி, புதிய சலுகைகள் மற்றும் புதிய ஆண் குரல் ஆகியவற்றை விளக்கும் சில சுவாரஸ்யமான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அலெக்ஸாவின் ஐந்தாவது ஆண்டை நினைவுகூரும் வகையில், அமேசான் நிறுவனம் மார்ச் 2-4, 2023 முதல் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஃபயர் டிவி சாதனங்கள் போன்றவற்றுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, அலெக்ஸாவின் அசல் குரல் மட்டுமில்லாமல், அதில் புதிதாக ஆண் குரலும் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண் குரல் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும்.
அலெக்ஸாவின் குரலை மாற்றுவதற்கு எக்கோ டிவைஸில் அல்லது அலெக்சா செயலியில் “அலெக்சா, உனது குரலை மாற்று” என்று கூறினால் போதும். அல்லது அதன் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று அலெக்ஸாவின் குரலைத் தேர்வுசெய்தால், பயனர்கள் அலெக்ஸாவின் குரலை மாற்றலாம்.
கடந்தாண்டில் அலெக்சாவின் வளர்ச்சி:
அமேசான் பிரைம் மியூசிக், ஸ்பாடிஃபை, ஜியோசாவ்ன் மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற சேவைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பாடல்களை அலெக்ஸா ஸ்ட்ரீமிங் செய்தது. இதனால் கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, அலெக்சாவிடம் பாடல் போடும்படி கேட்கப்பட்ட கோரிக்கைகள் கிட்டத்தட்ட 53% அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த ஆடியோ, வீடியோ, கட்டுரைகள் போன்றவற்றை தேடவும், அதை கன்ட்ரோல் செய்யவும் அலெக்ஸாவுடன் கூடிய Fire TV சாதனங்களை பன்படுத்துகின்றனர். கடந்தாண்டு அவ்வாறு பயன்படுத்திய விதம் 600% அதிகமாக அதிகரித்தது.
இதே போல் எக்கோ சாதனங்களில் அலெக்சா ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பில் பேமெண்ட்களைச் செய்வது சுமார் 102% அதிகரித்துள்ளது. அலெக்ஸா மூலம் ஸ்மார்ட் ஹோம் உபகரணங்களைக் கன்ட்ரோல் செய்வது 515% அதிகரித்துள்ளது.
Airtel 5G, Jio 5G நெட்வொர்க் கிடைக்கும் இடங்கள்! உங்க ஏரியா இதுல இருக்கானு பாருங்க!
"அலெக்ஸா, எப்படி இருக்கிறாய்?" என்ற கேள்வி மட்டும் ஒரு நாளைக்கு 31,680 முறை கேட்கப்பட்டதாகவும், “அலெக்சா, ஐ லவ் யூ” என்பதை ஒரு நாளைக்கு 21,600 முறை சொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது முறையே சுமார் 214% மற்றும் 275% அதிகரித்துள்ளது.
5 ஆம் ஆண்டுவிழா மற்றும் அமேசான் அலெக்ஸாவின் வளர்ச்சி குறித்து, அமேசான் இந்தியாவின் அலெக்ஸாவின் கன்ட்ரி மேனேஜர் திலீப் ஆர்.எஸ் கூறுகையில், ‘பல இந்தியப் பயனர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக அலெக்சாவுடன் தொடர்புகொள்வதைப் பார்க்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்காகவும் அலெக்ஸாவை உருவாக்குவதே எங்கள் நோக்கமாக உள்ளது’ என்றார்.