குறைந்த விலையில் ஐபோன் போன்ற லுக்? ரியல்மியின் புதிய 5G போன்கள் - கலர்ஸே மிரட்டுதே!
Realme 16T ரியல்மியின் அதிரடி! Realme 16T 5G மற்றும் P4R 5G போன்களின் கலர் மற்றும் மெமரி விவரங்கள் லீக் ஆகின. முழு விவரம் இதோ! புதிய 5G போன்கள் - கலர்ஸே மிரட்டுதே!

Realme 16T
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ரியல்மி நிறுவனம், தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. ஏற்கனவே சந்தையில் உள்ள ரியல்மி 16 சீரிஸ் மற்றும் பி சீரிஸ் வரிசையில், தற்போது Realme 16T 5G மற்றும் Realme P4R 5G என இரண்டு புதிய மாடல்கள் விரைவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் என்னென்ன சிறப்பம்சங்களுடன் வரக்கூடும் என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்:
Realme 16T 5G: ஒரு பவர்ஃபுல் என்ட்ரி
ரியல்மி 16 சீரிஸில் ஏற்கனவே 'ப்ரோ' மாடல்கள் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், 16T 5G ஒரு மிடில்-ரேஞ்ச் கிங்காக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூன்று விதமான மெமரி வேரியண்ட்களில் வெளிவர வாய்ப்புள்ளது:
• 6GB RAM + 128GB Storage
• 8GB RAM + 128GB Storage
• 8GB RAM + 256GB Storage
இந்த போன் ஸ்டார்லைட் ரெட் (Starlight Red), ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black) மற்றும் அரோரா கிரீன் (Aurora Green) ஆகிய கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
Realme P4R 5G: பட்ஜெட் விலையில் 5G வேகம்
குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களை எதிர்பார்க்கும் மக்களுக்காக 'பி சீரிஸ்' அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் P4R 5G மாடல் வரவுள்ளது. இதன் மெமரி ஆப்ஷன்கள் இதோ:
• 4GB RAM + 128GB Storage
• 6GB RAM + 128GB Storage
• 6GB RAM + 256GB Storage
இந்த போன் சில்வர் கிளேர் (Silver Glare), டைட்டானியம் கிளேர் (Titanium Glare) மற்றும் லாவெண்டர் கிளேர் (Lavender Glare) ஆகிய மிரட்டலான ஷேட்களில் வெளிவரலாம்.
BIS சான்றிதழும் உறுதிப்படுத்தப்பட்ட வருகையும்
இந்த இரண்டு போன்களும் இந்திய தர நிர்ணய அமைப்பான (BIS) தளத்தில் RMX5268 மற்றும் RMX5266 என்ற மாடல் எண்களுடன் காணப்பட்டுள்ளன. பொதுவாக பிஐஎஸ் தளத்தில் ஒரு போன் பட்டியலிடப்பட்டால், அது அடுத்த ஒரு சில வாரங்களில் சந்தையில் அறிமுகமாகிவிடும். எனவே, ஏப்ரல் மாதத்திற்குள் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விலை மற்றும் பிற வசதிகள்
இதுவரை இந்த போன்களின் கேமரா அல்லது பிராசஸர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரியல்மி 16T 5G சுமார் ரூ. 20,000 - ரூ. 25,000 விலையிலும், Realme P4R 5G சுமார் ரூ. 12,000 - ரூ. 15,000 விலையிலும் அறிமுகமாக வாய்ப்புள்ளது. 5,000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இதில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதி.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

