Snapchat Update: இனி அட்டகாசமான ஆடியோவை அசால்ட்டாக சேர்க்கலாம்!

ஸ்னாப் சாட் செயலியில்  பயனர்களை கவரும் வகையில் இரண்டு புதிய ஆடியோ சார்ந்த அப்டேட்கள் வந்துள்ளன. இதுபற்றிய விவரங்களை இங்குக் காணலாம்.

Snapchat introduces new audio recommendations and music sync features, check details here

பிரபல மெசேஜ் செயலியான ஸ்னாப்சாட் சமீபத்தில் இரண்டு புதிய அம்சங்கள் வந்துள்ளன. அவை: 'லென்ஸ்களுக்கான ஒலிகள் பரிந்துரைகள்' மற்றும் 'கேமரா ரோலுக்கான சவுண்ட்ஸ் ஒத்திசைவு' ஆகும். இந்த அப்டேட் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

பெயருக்கு ஏற்றாற் போல, 'லென்ஸ்களுக்கான ஒலிகள் பரிந்துரை' என்பது ஸ்னாப்சாட்டின் லென்ஸ்கள் எனப்படும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஃபில்டர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அம்சமாகும், மேலும் பயன்படுத்தப்படும் லென்ஸ் அம்சத்தை நிறைவு செய்யும் போது, அதற்கு பொறுத்தமான ஒலிகளை எளிதில் கண்டறிய பயனர்களுக்கு உதவுகிறது. 

பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோவில் லென்ஸைப் பயன்படுத்தும்போது, அந்த மீடியாவில் சேர்க்கக்கூடிய வகையில், பொருத்தமான ஆடியோகளை பட்டியலிடும். அதில் தேவையான பிடித்தமான ஆடியோவை பயனர்கள் தேர்வுசெய்யலாம்.

இரண்டாவது அப்டேட் 'கேமரா ரோலுக்கான சவுண்ட்ஸ் ஒத்திசைவு' ஆகும். இது பயனர்கள் ஒரு மாண்டேஜ் செய்யும் போது, புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் போன்ற ஏற்கெனவே பதிவேற்றிய மீடியாவை தானாகவே அதற்கு ஏற்ற இசையுடன் ஒத்திசைக்கிறது. நான்கு முதல் இருபது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரையில் இதில் பயன்படுத்தலாம். Bமலும், டிரெண்டிங் சேலஞ்ச் அல்லது ஆடியோவில் பதிவுகளை உருவாக்க விரும்புவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Facebook, Google நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் செய்த காரியம்!

ஸ்னாப் சாட்டின் இந்த அப்டேட் குறித்த முழுமையான விவரங்கள் ஸ்னாப் சாட்டின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று பார்வையிடலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்: 

தினமும் 250 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியுடன் ஈடுபடுவதால், Snap இன் முன்னணி AR லென்ஸ் தொழில்நுட்பம், சவுண்ட்ஸுடன் இணைந்து இன்னும் மேம்படுத்தியுள்ளது. Snapchat இல் உள்ள ஆடியோ மூலம்  இசையுடன் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், ஒட்டுமொத்தமாக 2.7 பில்லியன் வீடியோக்களை உருவாக்கி 183 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. அந்த வகையில் கேமரா ரோலுக்கான லென்ஸ்கள் மற்றும் ஒலிகளின் ஒத்திசைவுக்கான ஒலிகள் பரிந்துரைகளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios