AI Muse: AI நமக்காக போன் பேசுமா? Meta-வின் Muse செய்யப்போகும் அசத்தல் வேலை
AI Muse: AI நமக்காக போன் பேசி தகவல்களைப் பெறும் காலம் தொடங்குகிறதா? Meta-வின் Muse Personal AI Agent, தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல், முன்பதிவு செய்வது, உள்ளிட்ட பணிகளை எப்படி மேற்கொள்ளும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

AI நமக்காக போன் பேசுமா?
சில சூழல்களில் AI நமக்குப் பதிலாக தொலைபேசியில் பேசும் நிலை வந்துவிட்டது என்று சொல்லலாம். குறிப்பாக Meta உருவாக்கியுள்ள Muse என்ற Personal AI Agent, பயனரின் சார்பாக சில பணிகளைச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசும் திறனும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மெட்டா (Meta) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி, Muse என்பது பயனரின் சார்பாக பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் Personal AI Agent ஆகும். இது இணையதளங்களைப் பயன்படுத்தி தேவையான தகவல்களைத் தேடுவது, appointment முன்பதிவு செய்வது, ஆன்லைன் ஃபார்ம்களை நிரப்புவது, வாடிக்கையாளர் சேவை தொடர்பான பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்களைச் செய்யும் திறன் கொண்டதாக Meta தெரிவித்துள்ளது.
Muse என்ன செய்ய முடியும்?
Muse என்பது சாதாரண chatbot அல்ல. அது ஒரு personal AI agent (செயற்கை நுண்ணறிவு முகவர்) இவை பல கட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Muse-க்காக Meta உருவாக்கியுள்ள Muse Secure VM என்பது ஒரு தனிப்பட்ட மெய்நிகர் கணினி (Virtual Computer) போன்றது. இதில் தனியாக ஒரு browser உள்ளது. அதன் மூலம் Muse இணையதளங்களைத் பயன்படுத்தி ஆன்லைன் படிவங்களை (Forms) நிரப்புவது, appointment-களை முன்பதிவு செய்வது, customer service தொடர்பான பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்களை பயனரின் சார்பாகச் செய்ய முடியும்.
மேலும், பயனரின் அனுமதியுடன் மின்னஞ்சல் (email), காலண்டர்(calendar), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற செயலிகளுடன் Muse இணைக்கப்பட முடியும்.
multi-step பணிகள்
வழக்கமான AI-யிடம் நாம் ஒரு கேள்வி கேட்டால், அது பதிலை மட்டும் வழங்கும். ஆனால் AI Agent-க்கு ஒரு பணியை ஒப்படைத்தால், அந்தப் பணியை முடிக்க தேவையான பல படிகளைத் தானாக மேற்கொள்ளும்.
உதாரணமாக,
நீங்கள் இந்த கடைக்கு போன் செய்து இந்த பொருள் இருக்கிறதா? சலூனில் நாளைக்கு நேரம் கேட்டு புக் செய், நாளை காலை 10 மணிக்கு மருத்துவர் appointment வேண்டும் என்று சொன்னால், AI அந்த வேலையை உங்கள் சார்பாகச் செய்யும் வகையில்தான் இந்த தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.
விளக்கமாக,
”கோவையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு போன் செய்து, இன்று இரவு 7 மணிக்கு 4 பேர் சாப்பிட டேபிள் இருக்கிறதா என்று கேள்” என்றால், AI அழைப்பு செய்து, “இன்று இரவு 7 மணிக்கு 4 டேபிள் கிடைக்குமா? என்று கேட்டு, கிடைக்கும் நேரத்தைத் தெரிந்துகொண்டு நம்மிடம் தகவல் தெரிவிக்கும்.
Meta-வின் Muse, multi-step பணிகளைச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் தகவலைத் தேடுவது மட்டுமின்றி, தேவையான இடத்தில் தொலைபேசி அழைப்பையும் மேற்கொண்டு பதிலை நம்மிடம் கொண்டு வருகிறது.
தொலைபேசி அழைப்பும் செய்யுமா?
Meta-வின் தகவலின்படி, Muse பல்வேறு செயலிகள் மற்றும் இணைய சேவைகளுடன் இணைந்து செயல்படக்கூடியது.
இதன் மூலம்,
- பயணங்களை முன்பதிவு செய்வது (travel booking)
- மின்னஞ்சல் (email) தொடர்பான பணிகளை மேற்கொள்வது
- சலூனில் appointment கேட்பது
- ஒரு கடையில் குறிப்பிட்ட பொருள் stock-ல் இருக்கிறதா என்று கேட்பது
- ஒரு சேவைக்கான quotation கேட்பது
- customer service தொடர்பான விஷயங்களை விசாரிப்பது
உள்ளிட்ட பல்வேறு பணிகளை பயனரின் சார்பாகச் செய்ய முடியும்.
உதாரணமாக, Muse, அருகில் உள்ள ஒரு furniture shop-க்கு போன் செய்து, 6 அடி dining table-ன் விலை என்ன, delivery charge எவ்வளவு என்று கேட்டு எனக்குத் தெரிவி என்று நீங்கள் AI-யிடம் பணியை ஒப்படைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது AI, அந்தப் பணியைப் புரிந்துகொண்டு தேவையான செயல்முறைகளை மேற்கொள்ளும்.
கடை ஊழியர்: எந்த table வேண்டும்? என்று கேட்டால், AI நீங்கள் முன்பே கொடுத்த தகவலின் அடிப்படையில் உரையாடலைத் தொடரும்.
பேசி முடித்த பிறகு, உங்களிடம், 6 அடி dining table-ன் விலை ரூ.XX. Delivery charge ரூ.XXX என்று கடை தெரிவித்துள்ளது என்று தகவலைத் தெரிவிக்கும்.
சாதாரண chatbot பெரும்பாலும் உங்கள் கேள்விக்கு பதில் அல்லது தேவையான தகவலை வழங்கும். ஆனால் AI Agent-ன் நோக்கம், நீங்கள் ஒப்படைக்கும் ஒரு பணியைப் புரிந்துகொண்டு, அதற்குத் தேவையான பல்வேறு செயல்களை மேற்கொண்டு, முடிவை உங்களிடம் கொண்டு சேர்ப்பதாகும்.
AI மூலம் குரல் அழைப்பு (AI voice calling)
Meta நிறுவனம் ஏற்கனவே WhatsApp Business தளத்தில் AI மூலம் குரல் அழைப்புகளை (AI voice calling) மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சில நிறுவனங்களைத் தொலைபேசி அழைப்பு மூலம் (voice calling) தொடர்புகொள்ள முடியும்.
அதேபோல், நிறுவனங்களும் தங்களது Business AI உதவியுடன் குரல் அழைப்புகளின் ( voice calls)மூலம் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதனால் என்ன மாற்றம் வரலாம்?
இப்போது நாம் AI-யிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு email எழுதித் தா என்று கேட்கிறோம்.
ஆனால், Personal AI Agent-களின் வளர்ச்சியுடன், இந்த விஷயம் குறித்து அவருக்கு email அனுப்பி, தேவையான தகவல்களைச் சேர்த்து, அவரிடமிருந்து பதில் வந்தால் எனக்குத் தெரிவி என்று ஒரு பணியையே AI-யிடம் ஒப்படைக்கும் நிலை உருவாகி வருகிறது.
அதாவது, AI பதில் சொல்லும் கருவியாக மட்டும் இல்லாமல், நமக்காக வேலை செய்யும் digital agent ஆக மாறுகிறது.
Meta அதிகாரபூர்வமாக என்ன அறிவித்துள்ளது?
Muse-ன் phone calling வசதி தொடர்பாக Meta மனித contractors-ஐ சில அழைப்புகளில் பயன்படுத்தி சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
இனி எந்த வேலைகளை AI செய்யலாம்?
- மருத்துவர் appointment கேட்பது
- உணவகத்தில் table availability கேட்பது
- கடையில் பொருள் stock கேட்பது
- வீட்டுப் பராமரிப்பு சேவைக்கு quotation கேட்பது
- customer care-க்கு ஆரம்பகட்ட விசாரணை செய்வது
- travel தொடர்பான தகவல்களைப் பெறுவது
- delivery தொடர்பான status கேட்பது
ஆனால் ஒவ்வொரு சேவையிலும் AI phone calling வசதி கிடைக்கும் என்று பொதுவாகக் கூற முடியாது. நாடு, நிறுவனம், சேவை வழங்குநர் மற்றும் AI சேவையின் availability ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
AI நமக்காக போன் பேசுமா?
AI நமக்காக போன் பேசுமா? என்ற கேள்விக்கு பதில் AI agent தொழில்நுட்பம் அந்த நிலையை ஏற்கனவே எட்டத் தொடங்கியுள்ளது. Meta-வின் Muse, கேள்விகளுக்கு பதில் சொல்லும் AI யைத் தாண்டி, பயனருக்காக வேலைகளைச் செய்யும் personal AI agent ஆக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் AI நம்மிடம் பேசுமா? என்பதுதான் கேள்வியாக இருந்தது. இப்போது AI நமக்காக மற்றவர்களிடம் பேசுமா? என்பதுதான் அடுத்த கேள்வியாக மாறியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

