MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • வெஸ்பா Tech 80 லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகம்.. லிமிடெட் எடிஷனுக்கு இவ்வளவு டிமாண்ட் இருக்கா.!

வெஸ்பா Tech 80 லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகம்.. லிமிடெட் எடிஷனுக்கு இவ்வளவு டிமாண்ட் இருக்கா.!

இத்தாலிய ஸ்கூட்டர் தயாரிப்பாளரான வெஸ்பா, தனது 80வது ஆண்டு விழாவைக் கொண்டாட 'டெக் 80' என்ற சிறப்பு பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'Verde Pastello' பச்சை நிறம் மற்றும் '80-வது ஆண்டு' பேட்ஜ் ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்களாகும்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 25 2026, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வெஸ்பா 80 வது ஆண்டு ஸ்பெஷல்
Image Credit : Google

வெஸ்பா 80-வது ஆண்டு ஸ்பெஷல்

இத்தாலிய ஸ்கூட்டர் தயாரிப்பில் தனித்துவம் கொண்ட வெஸ்பா, தனது 80வது ஆண்டு கொண்டாட்டத்தை நினைவுகூர்ந்து இந்திய சந்தையில் ‘டெக் 80’ என்ற சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய கால கிளாசிக் தோற்றத்தையும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளையும் ஒருங்கிணைக்கும் இந்த மாடல், நகரப் பயணத்தை ஸ்டைலாக அனுபவிக்க விரும்புபவர்களை குறிவைத்துள்ளது. 125cc மற்றும் 150cc என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் இது கிடைக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர், நிறுவனத்தின் தற்போதைய பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டதால், பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் இல்லை.

24
வெஸ்பா 80 ஆண்டு ஸ்கூட்டர்
Image Credit : Google

வெஸ்பா 80 ஆண்டு ஸ்கூட்டர்

125cc பதிப்பில் 124.4cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது; இது 9.5 bhp சக்தியும் 10.1 Nm டார்க்கும் உற்பத்தி செய்கிறது. 150cc மாடலில் 149.5cc இன்ஜின், 11.4 bhp சக்தி மற்றும் 11.6 Nm டார்க்கை வழங்குகிறது. இரண்டிலும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளதால், நகரப் பயணத்தில் மென்மையான ஓட்ட அனுபவம் கிடைக்கும். டிசைன் விஷயத்தில், இந்த ஸ்கூட்டர் தான் முக்கிய கவன ஈர்ப்பாக உள்ளது. 1940களில் வெளியான ஆரம்பகால வெஸ்பா மாடல்களின் நினைவுகளை கிளப்பும் ‘Verde Pastello’ பச்சை நிறத்தில் இது அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
நீண்ட ரேஞ்ச் ஸ்கூட்டர் வந்தாச்சு.. இந்திய மக்கள் எதிர்பார்த்த கேம் சேஞ்சர்.. விலை எவ்வளவு?
Related image2
16 மாதங்களில் விற்பனை இரட்டிப்பு.. 6 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர் எது தெரியுமா?
34
வெஸ்பா ஸ்கூட்டர் வசதிகள்
Image Credit : Google

வெஸ்பா ஸ்கூட்டர் வசதிகள்

முன்புற ஷீல்டு முதல் கண்ணாடிகள், ஹேண்டில்பார், சஸ்பென்ஷன் பாகங்கள் வரை ஒரே நிற ஒத்திசைவு வழங்கப்பட்டுள்ளது. சீட் மற்றும் ஹேண்டில் கிரிப்ஸ் அடர் பச்சை நிறத்தில் உள்ளதால், ரெட்ரோ லுக் மேலும் மேம்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண மாடல் அல்ல. ஒரு லிமிடெட் எடிஷன் என்பதே இதன் சிறப்பு. 1946-ல் அறிமுகமான ஆரம்பகால Vespa 98 மாடலின் ஸ்டைலை நினைவூட்டும் வகையில், சக்கரங்களும் அதே பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டைமண்ட்-கட் ஃபினிஷிங் மற்றும் பச்சை நிற அலங்காரம், இதன் பிரீமியம் தோற்றத்தை உயர்த்துகின்றன.

44
80-வது ஆண்டு’ நினைவுப் பேட்ஜ்
Image Credit : Google

80-வது ஆண்டு’ நினைவுப் பேட்ஜ்

மேலும், முன்புறத்தில் ‘80-வது ஆண்டு’ நினைவுப் பேட்ஜ் மற்றும் பின்புறத்தில் “80 ஆண்டுகள் வெஸ்பா எஸ்ட். 1946” என்ற குறியீடு இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு, வெஸ்பாவின் பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியான புதுமையாக பார்க்கப்படுகிறது. ஸ்டைல், வரலாறு மற்றும் நவீன தொழில்நுட்பம்—மூன்றையும் இணைக்கும் இந்த டெக் 80 மாடல், இந்திய நகர சாலைகளில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவது ஐயமில்லை.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உருளி வண்டிகள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பைக்னு ஒன்னு வங்குனா இந்த பைக் வாங்கனும்..! மைலேஜ்ஐ அள்ளி கொடுக்கும் Bajaj CNG பைக்
Recommended image2
டாடாவின் ட்ரிபிள் ட்ரீட்... 3 EV கார்களை கொத்தாக களமிறக்க திட்டம்..!
Recommended image3
பழைய கார் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி? வாரண்டி, தரத்தை உறுதி செய்வது எப்படி? முழு விவரம்!
Related Stories
Recommended image1
நீண்ட ரேஞ்ச் ஸ்கூட்டர் வந்தாச்சு.. இந்திய மக்கள் எதிர்பார்த்த கேம் சேஞ்சர்.. விலை எவ்வளவு?
Recommended image2
16 மாதங்களில் விற்பனை இரட்டிப்பு.. 6 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved