- Home
- டெக்னாலஜி
- இன்னும் 0.02°C ஏறினால் அவ்ளோதான்... வரலாற்றின் மிக மோசமான 'காட்ஜில்லா' எல் நினோவாக உருவெடுக்கிறதா? விஞ்ஞானிகள் பகீர் எச்சரிக்கை!
இன்னும் 0.02°C ஏறினால் அவ்ளோதான்... வரலாற்றின் மிக மோசமான 'காட்ஜில்லா' எல் நினோவாக உருவெடுக்கிறதா? விஞ்ஞானிகள் பகீர் எச்சரிக்கை!
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ தீவிரமடைந்து வரும் நிலையில், வரலாற்றிலேயே மிக வலிமையான 'காட்ஜில்லா' நிலை எட்ட இன்னும் வெறும் 0.02°C மட்டுமே மீதமுள்ளது எனப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்!

‘காட்ஜில்லா’ நிலையைத் தொடப்போகும் எல் நினோ
பூமிப் பந்தின் வானிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் இயற்கை விந்தையான 'எல் நினோ' இப்போது இதுவரை கண்டிராத அசுர வேகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பசிபிக் பெருங்கடலின் இதயப் பகுதியான நினோ 3.4 கண்காணிப்பு மண்டலத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வழக்கத்தை விட சுமார் 3°C வரை எகிறியுள்ளது. மனித வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட மிக மோசமான ‘காட்ஜில்லா’ எல் நினோ சாதனையை முறியடிக்க, இதற்கு இன்னும் வெறும் 0.02°C வெப்ப உயர்வு மட்டுமே பாக்கி எனப் புதிய புள்ளிவிவரங்கள் அதிர வைக்கின்றன.
கடலுக்கு அடியில் கொதிக்கும் வெப்ப உலை!
இந்த எல் நினோ வளர்ந்து வரும் வேகம் உலக விஞ்ஞானிகளையே மிரள வைத்துள்ளது. மே முதல் ஜூலை வரை இயல்பை விட +1.5°C ஆக இருந்த வெப்பநிலை, ஜூலையில் +2°C ஆகவும், ஆகஸ்ட்டில் மேலும் அதிவேகமாகவும் உயர்ந்தது. இதைவிடப் பயங்கரம் என்னவென்றால், கடல் மட்டத்துக்கு அடியில் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் ஆழத்தில் இயல்பை விட 8°C வரை கூடுதல் வெப்பம் தேங்கிக் கிடக்கிறது. கடலடி வெப்பக் குவியலானது, இந்த எல் நினோவை மேலும் வெறியூட்டி வளர்க்கும் ராட்சத எரிபொருளாக செயல்பட்டு வருகிறது.
2027 வரை தப்பவே முடியாது: உலக வானிலை அமைப்பு பகீர் கணிப்பு
வழக்கமாக வானிலை கணிப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஐயப்பாடு இருக்கும். ஆனால் இம்முறை, உலக வானிலை அமைப்பு (WMO) 100% உறுதியுடன் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எல் நினோ நிகழ்வு 2027 பிப்ரவரி வரை நீடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் வானிலை சமநிலைக்குத் திரும்புவதற்கோ அல்லது குளிர்ச்சியூட்டும் 'லா நினா' (La Niña) உருவாகவோ துளியும் வாய்ப்பில்லை. குறிப்பாக, 2026 செப்டம்பர் - நவம்பர் காலகட்டத்தில் வெப்பநிலை உயர்வு சராசரியாக 3.6°C ஆகப் பதிவாகி, நவம்பர் - டிசம்பர் வாக்கில் அசுர எல் நினோ தனது உச்சக்கட்ட ருத்ரதாண்டவத்தை ஆடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகை உலுக்கப்போகும் ஆபத்துகள் என்னென்ன?
பசிபிக் பெருங்கடலில் தொடங்கும் இந்த வெப்பக் காய்ச்சல் அங்கேயே நின்றுவிடாது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் இந்தியப் பெருங்கடல் முதல் உலக நாடுகள் அனைத்தின் பருவமழை, வெப்ப அலைகள், சூறாவளி மற்றும் வறட்சிக் கட்டமைப்புகளை இது மொத்தமாகப் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டது.
ஏற்கனவே உலக் பெருங்கடல்கள் அனைத்தும் வரலாறு காணாத வெப்பத்தில் தகித்துக் கொண்டு இருக்கும் சூழலில், எல் நினோவின் தீவிரமும் சேர்ந்துகொள்வது பேராபத்தை இரட்டிப்பாக்கும். இதன் விளைவாக ஒருபுறம் முன் எப்போதும் இல்லாத தீவிரப் பெருவெள்ளம், மறுபுறம் நிலத்தடி நீரை உறிஞ்சித் தள்ளும் கடுமையான வறட்சி, மக்களைச் சுருண்டு விழ வைக்கும் அதீத வெப்ப அலைகள் ஏற்படும். வரவிருக்கும் இயற்கையின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தங்களது அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தயார் நிலையில் வைத்திருக்குமாறு சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் அவசர அழைப்பு!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

