MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Preethi Raj Shetty: தவெக-வில் இணைந்த உடனே முக்கிய பொறுப்பு! விஜய்யின் சட்டப் புள்ளியாக மாறிய வழக்கறிஞர்.. யார் இந்த ப்ரீத்தி ராஜ் ஷெட்டி?

Preethi Raj Shetty: தவெக-வில் இணைந்த உடனே முக்கிய பொறுப்பு! விஜய்யின் சட்டப் புள்ளியாக மாறிய வழக்கறிஞர்.. யார் இந்த ப்ரீத்தி ராஜ் ஷெட்டி?

CM Vijay Divorce Case: நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தவெகவில் இணைந்த வழக்கறிஞர் ப்ரீத்தி ராஜ் ஷெட்டி விஜய்யின் தனிப்பட்ட விவகாரங்களை கையாளுகிறார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 17 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய் சங்கீதா விவகாரத்து
Image Credit : google

விஜய் - சங்கீதா விவகாரத்து

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜயிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி ஆன்லைன் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
 செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம்
Image Credit : x/actorvijay

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம்

அந்த வழக்கு, ஏப்ரல் 20ம் தேதி அன்று முதற்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், தங்களை நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் வாயிலாக காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுஜாதா, அந்த கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையாதா?

Related Articles

Related image1
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Related image2
10th Public Exam Answer Sheet Copy: மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! இன்று முதல் ஜூன் 23 வரைக்கும் டைம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!
35
தவெகவில் இணைந்த ப்ரீத்தி ராஜ் ஷெட்டி
Image Credit : Asianet News

தவெகவில் இணைந்த ப்ரீத்தி ராஜ் ஷெட்டி

கடந்த சில நாட்களுக்கு முன் ப்ரீத்தி ராஜ் ஷெட்டி தவெகவில் முறைப்படி இணைந்த உடனே விஜய் தொடர்பான தனிப்பட்ட வழக்கு மற்றும் கட்சியின் முதன்மை சட்ட விவகாரங்களைக் கையாளும் மிக முக்கிய சட்டப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

45
யார் இந்த வழக்கறிஞர் ப்ரீத்தி ராஜ் ஷெட்டி
Image Credit : Asianet News

யார் இந்த வழக்கறிஞர் ப்ரீத்தி ராஜ் ஷெட்டி

தமிழ்நாட்டில் குறிப்பாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் ஊடக விவாதங்கள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு இளம் குற்றவியல் வழக்கறிஞர். இவர் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு சிவில், குடும்ப நல வழக்குகள், செக் மோசடி மற்றும் முக்கியமாக குற்றவியல் சார்ந்த சட்டப் பிரிவுகளில் பணியாற்றி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் பொது மேடைகளிலும் தவெகவின் கொள்கைகளையும், அதன் சட்டப்பூர்வ நிலைப்பாடுகளையும் ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பிரதிபலித்து வருகிறார். இதன் காரணமாகவே தவெக தலைமை இவரை அடையாளம் கண்டு, கட்சியில் இணைந்த உடனேயே மிக முக்கிய சட்டப் பொறுப்புகளை வழங்கியுள்ளது.

School: பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? மொத்தம் 155 நாட்கள் லீவு!

55
தவெக முக்கிய வழக்குகளில் ஆஜர்
Image Credit : Asianet News

தவெக முக்கிய வழக்குகளில் ஆஜர்

குறிப்பாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிரான முக்கிய வழக்குகளில் தவெக தரப்பில் ஆஜராகி வாதாடி வருகிறார். பொதுவாக ஒரு கட்சியில் இணைந்து பல ஆண்டுகள் உழைத்த பிறகே முக்கிய பொறுப்புகள் தேடி வரும். ஆனால், தவெகவில் இணைந்த மிகக் குறுகிய காலத்திலேயே, விஜய்யின் தனிப்பட்ட விவாகரத்து வழக்கு முதல் கட்சியின் பிரதான சட்ட விவகாரங்கள் வரை அனைத்தையும் கையாண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
சங்கீதா வி (தொலைக்காட்சி நடிகை)
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Recommended image2
Now Playing
"13 லட்சம் கோடி கடனை காட்டி ஏமாற்றாதீங்க!" தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி!
Recommended image3
Now Playing
பெண்களுக்கு கிடைக்கும் ரூ.2500.! இதை மட்டும் செஞ்சா போதும் 2 மடங்கு போனஸ் உறுதி.!
Related Stories
Recommended image1
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
10th Public Exam Answer Sheet Copy: மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! இன்று முதல் ஜூன் 23 வரைக்கும் டைம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved