தக்காளி, வெங்காயம் விலை இன்று ஷாக் கொடுத்ததா.? ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
காய்கறி சந்தையில் தக்காளி விலை ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விலை உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் வரத்து அதிகரிப்பால் விலை சற்று குறைந்துள்ளது.

தக்காளி வெங்காயம் விலை
சமையல் என்றாலே காய்கறிகள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், காய்கறிகள் இல்லாத சமையல் ருசியை கொடுக்காது. எனவே தினந்தோறும் மூட்டை மூட்டையாக காய்கறிகள் சந்தைகளுக்கு வந்தாலும் பொதுமக்கள் பை நிறைய வாங்கி சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை மற்ற காய்கறிகளோடு பெரிய அளவில் உள்ளது.
எனவே தக்காளி, வெங்காயமானது ரசம் முதல் பிரியாணி சமைப்பதை வரை என எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அந்த வகையில் காய்கறி சந்தையில் தக்காளி விலையானது கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் உயர்வை சந்தித்தது. ஒரு கிலோ 150 ரூபாயை தாண்டியது. இதே போல வெங்காயத்தின் விலையும் உச்சத்தை தொட்டது.
இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தக்காளி
இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்ததனர். பை நிறைய வாங்கிய தக்காளி, வெங்காயம், கை நிறைய கூட வாங்க முடியாத அளவிற்கு தவித்தனர். மேலும் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனையடுத்து விலை எப்போது குறையும் என காத்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்தது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதே போல வெங்காயத்தின் விலையும் சரிந்தது. ஒரு கிலோ 180 ரூபாயில் இருந்து 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் தற்போது இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தக்காளி விலை கடந்த வாரம் திடீரென உயர்ந்தது. ஒரு கிலோ மொத்த சந்தையில் 50 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை சந்தையில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலையானது சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் குறைந்த தக்காளி விலை
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 28 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ஆந்திராவில் இருந்து வியாபாரிகள் தக்காளி வாங்க வராத நிலையில் ஒரு கிலோ தக்காளி 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆந்திராவில் தக்காளி அறுவடை செய்ய தொடங்கியுள்ளதால் மீண்டும் தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,
முருங்கைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது