MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசியலின் ஒரு சகாப்தம்.! கலைஞர் செய்த சாதனைகள் இவ்வளவா.? வாங்க ஃபிளாஷ் பேக்கை பார்ப்போம்

தமிழக அரசியலின் ஒரு சகாப்தம்.! கலைஞர் செய்த சாதனைகள் இவ்வளவா.? வாங்க ஃபிளாஷ் பேக்கை பார்ப்போம்

தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் கலைஞர் கருணாநிதி. அரசியல் மற்றும் கலைத்துறையில் தனித்துவமானவர். அவரது செயல்பாடுகளும் சாதனைகளும் இன்றளவும் பாடமாக உள்ளன.

3 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 03 2025, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கலைஞரும் தமிழக அரசியலும்
Image Credit : Google

கலைஞரும் தமிழக அரசியலும்

தமிழ்நாட்டில் கலைஞர் என்றால் ஒரே ஒரு பெயரைத் தான் குறிக்கும். அவர் தான், திமுக தலைவர் கருணாநிதி. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டிணம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3ம் தேதி, 1924ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத பெயர். தமிழ்நாட்டு அரசியலிலும் கலைத் துறையிலும் பிரபலமாக விளங்கிய மு.கருணாநிதியின் செயல்பாடுகள் தனித்துவமானவை. கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளும் சாதனைகளும் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இன்றளவும் ஏதோரு வகையில் பாடமாகவே இருந்து வருகிறது.

26
அரசியல் களத்தில் கலைஞர் கருணாநிதி
Image Credit : our own

அரசியல் களத்தில் கலைஞர் கருணாநிதி

நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதில் தொடங்கியது கருணாநிதியின் மக்கள் தொண்டு, அடுத்ததாக தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் ரயில் நிலையத்திலிருந்து எழுதப்பட்டிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். அடுத்ததாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ரயில்களை தடுத்து நிறுத்தினார். இதனால் கருணாநிதி கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு படிப்படியாக முக்கிய தலைவராக உருவெடுத்தார் கருணாநிதி,

Related Articles

Related image1
13 முறை சட்டமன்ற உறுப்பினர்! 5 முறை முதலமைச்சர்! வரலாற்று சாதனை படைத்த கருணாநிதியின் பிறந்த நாள் இன்று!
Related image2
இலவச மின்சாரம் முதல் சமத்துவபுரம் வரை! கருணாநிதி கொண்டு வந்த முத்தான திட்டங்கள்!
36
அண்ணாவுடன் கலைஞர்
Image Credit : our own

அண்ணாவுடன் கலைஞர்

17 வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றினார் கருணாநிதி, இதனை தொடர்ந்து அறிஞர் அண்ணாவை முதன் முதலாக 1940களின் துவக்கத்தில் சந்தித்தார். 1949 ஆம் ஆண்டு புதிதாக ஒரு கட்சியை சி.என். அண்ணாதுரை துவங்கியபோது, அவருக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி.

46
கருணாநிதியின் அரசு பொறுப்புகள்
Image Credit : our own

கருணாநிதியின் அரசு பொறுப்புகள்

1962-ல் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், 1967-ல் பொதுப்பணித்துறை அமைச்சர். அண்ணா மறைவுக்குப் பின் 1969-ல் முதலமைச்சராகிறார் கருணாநிதி. அடுத்து, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. தமிழக சட்டமன்ற தேர்தல்களில் தான் போட்டியிட்ட 13 முறையும் கருணாநிதியை மக்கள் ஒருமுறைகூட தோற்க அனுமதித்ததில்லை. இந்த வரலாற்று சாதனைக்கு தற்போது வரை யாரும் செய்ததில்லை.

56
கருணாநிதி ஆட்சியில் அசத்தலான திட்டங்கள்
Image Credit : our own

கருணாநிதி ஆட்சியில் அசத்தலான திட்டங்கள்

குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கருணாநிதி தொடங்கினார். சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம். கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம், பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது, 

ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம், இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி அளித்தது.

66
மக்களுக்காக கடைசிய வரை போராடிய கலைஞர்
Image Credit : our own

மக்களுக்காக கடைசிய வரை போராடிய கலைஞர்

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநிலத்தின் ஆளுநர்களே பெற்று இருந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் போராடி, சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தான் வாழ்நாள் கடைசி வரைக்கும் மக்களுக்காக பாடுபட்டவர் கலைஞர் கருணாநிதி, 

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களால் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இது போன்ற பல ஆயிரம் சாதனைகளுக்கு சொந்தகாரரான கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்த உலகத்தை விட்டு விடை பெற்றார். கலைஞர் கருணாநிதி இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் இடத்தை பிடித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கலைஞர் நூலகம்
திமுக
மு. க. ஸ்டாலின்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Recommended image2
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
Recommended image3
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Related Stories
Recommended image1
13 முறை சட்டமன்ற உறுப்பினர்! 5 முறை முதலமைச்சர்! வரலாற்று சாதனை படைத்த கருணாநிதியின் பிறந்த நாள் இன்று!
Recommended image2
இலவச மின்சாரம் முதல் சமத்துவபுரம் வரை! கருணாநிதி கொண்டு வந்த முத்தான திட்டங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved