- Home
- Tamil Nadu News
- தனிநபர் ஆணையத்தை தலையில் கொட்டி வீட்டிற்கு அனுப்பிய நீதிமன்றம் - பொதுக்குழுவில் விஜய் மாஸ் ஸ்பீச்
தனிநபர் ஆணையத்தை தலையில் கொட்டி வீட்டிற்கு அனுப்பிய நீதிமன்றம் - பொதுக்குழுவில் விஜய் மாஸ் ஸ்பீச்
கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அவசர அவசரமாக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தை தலையில் கொட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவில் விஜய்யின் மாஸ் ஸ்பீச்..
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழக சட்டப்பேரவையில் கரூர் விவகாரம் தொடர்பாக முதல்வர் வன்மத்தை கக்கியுள்ளார். பெருந்தன்மையை பற்றி பெயரளவிற்கு மட்டுமே பேசுபவர் முதல்வர். இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுள் எனக்கு விதிக்கப்பட்டன.
தனிநபர் ஆணையத்தை தலையில் கொட்டி வீட்டிற்கு அனுப்பிய நீதிமன்றம்
கரூர் துயர சம்பவம் நடைபெற்றதும் அவசர அவசரமாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணையத்தை அமைத்தவர்களே அதனை மதிக்காமல் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். பின்னர் அந்த ஆணையத்தையும் உச்சநீதிமன்றம் தலையில் கொட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டது.
உச்சநீதிமன்றம் கேட்ட கேள்வி..
நியாயமான விசாரணை நடைபெறுமா என்று உச்சநீதிமன்றத்திற்கே சந்தேகம் வந்தது. எந்த ஆவணத்தின் அடிப்படையில் SIT அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேட்டது. திமுகவிற்கு ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாட முடியாமல் நின்றனர்.
2026ல் தவெக வாகை சூடும்
2026ல் இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி, ஒன்று திமுக, இன்னொன்று தவெக. 2026 தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை இப்போதே திமுக தயார் செய்து கொள்ள வேண்டும். 2026ல் தவெக வாகை சூடும். வரலாறு படைக்கும்.