- Home
- Politics
- வடிகட்டின பொய்..! சப்பைக்கட்டு..! உச்சநீதிமன்றம் நறுக் நறுக்கென்று கொட்டியதை மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா..? விஜய் சவுக்கடி கேள்வி
வடிகட்டின பொய்..! சப்பைக்கட்டு..! உச்சநீதிமன்றம் நறுக் நறுக்கென்று கொட்டியதை மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா..? விஜய் சவுக்கடி கேள்வி
நமக்கு வந்திருக்கிற இந்த இடையூறு வெறும் டெம்ப்ரவரி மட்டும்தான். எல்லாத்தையும் தகர்த்தெறிவோம். மக்களுடன் கைகோர்த்து நிற்போம். களத்துல போய் நிற்போம். நம்ம பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பவும் சொல்றேன் 2026ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி

மாமல்லபுரத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘‘ நம்ம குடும்ப உறவுகளை இழந்ததினால் சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இவ்வளவு நாளாக இருந்தோம். அப்படிப்பட்ட அந்த சூழல்ல நம்ம சொந்தங்களின் பக்கம் இருக்க வேண்டியது நம்முடைய கடமை. அதனாலதான் அவங்களோட சேர்ந்து அமைதி காத்து வந்தோம். ஆனால் இப்படி அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மள பத்தி வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் இது மாதிரி நிறைய விஷயங்கள் நம்மள பத்தி பரப்பப்பட்டன. இது எல்லாவற்றையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு துடைத்து ஏரியத்தான் போறோம். அதுக்கு முன்னாடி தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஓர் உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அரசியல் செய்ய விருப்பமில்லை, அரசியல் செய்ய விருப்பமில்லை என அடிக்கடி சொல்கிற முதல்வர் நம்மள குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்வதன் வாயிலாக பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசும் முதல்வர் 15.10.2025 அன்னைக்கு தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார்? என்பதையும் எப்படிப்பட்ட ஒரு அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பாங்க?
இந்த கரூரோடு சேர்ந்து நான்கு மாவட்டத்திற்கு இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் போயிருக்கிறோம். அங்கெல்லாம் கடைசி நிமிடம் வரைக்கும் எங்களுக்கு அந்த இடம் கொடுப்பாங்களா? மாட்டாங்களா? பெர்மிஷன் தருவாங்களா?மாட்டாங்களா?இப்படியே இழுத்து அடிச்சுட்டு இருப்பாங்க.நான் நாகப்பட்டினத்தில் சொன்னது மாதிரி தான்.நாங்க ஒரு இடம் செலக்ட் பண்ணி கேட்போம்.மக்கள் நல்லா ஸ்பேசியஸா நின்னு பாக்குற மாதிரி கேட்போம். ஆனால் ரிஜெக்ட் பண்ணிட்டு மக்கள் நெருக்கடியோடு நின்னு பாக்குற மாதிரி ஒரு இடத்தை செலக்ட் பண்ணி எங்களுக்கு குடுப்பாங்க. இது வந்து டீஃபால்ட்டா எல்லா இடத்துலயும் இந்த ஒரு ஆர்க்யூமெண்ட் நடந்துட்டு இருக்குனு வையுங்க. அது மட்டும் இல்ல, இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் கொடுக்கப்படாத கண்டிஷன்ஸ். உள்ளே இருந்து பாக்கணும். மேல வந்து கை காட்டக்கூடாதுனு சொல்லி உத்தரவு. உயர் நீதிமன்றத்தில் நாடி இருக்கணும் அல்கைக்கழிப்பு. இதுவும் தமிழக மக்கள் உணராமல் இருப்பாங்களா?
இப்படி ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நேர்மை திறனற்று நம்மள பத்தி இந்த குற்றம்சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வர் அவர்களுக்கு ஒரு சில கேள்விகள். உச்சநீதிமன்றத்தில் அதாவது 13.10.2025 அன்னைக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த அந்த விவாதங்களை வைத்தும் அந்தந்த உத்தரவுகளை வைத்தும் இந்த கேள்விகள். இப்படி பொய் மூட்டைகளா நம்மள பத்தி இந்த அவதூறுகளை அவிழ்த்து விட்ட முதல்வர் அவர்களுக்கும், திமுக அரசுக்கும் சார்பாக கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்டு அறிவார்ந்த வழக்கறிஞர்கள் அவங்க இந்த கபட நாடக திமுக அரசின் தில்லுமுல்லுகளை தாங்கி கொள்ள இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் திக்கித்திணறி நின்றது முதல்வர் அவர்களுக்கு மறந்து விட்டதா? கரூர் சம்பவத்துக்கு அப்புறமே அவசர அவசரமா ஒரு தனிநபர் ஆணையம், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு, அவசர அவசரமா இதெல்லாம் ஏன் நடக்குது? எதுக்காக நடக்குது என ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க. இதுவும் தமிழக முதல்வர் மறந்துட்டாரா? அதுக்கப்புறம் அந்த தனி நபர் ஆணையத்தை தலையிலேயே கொட்டி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அது வேற விஷயம். இப்படி எல்லாம் கேள்வி கேட்ட உடனே பதில் சொல்லி ஆகணும் இல்ல. அதனால சட்டமன்றத்தில் பேசும்போது உண்மை நிலையை தெளிவுபடுத்த தான் அப்படின்னு ஏதோ இந்த சட்ட ரீதியாகவும், சத்தியத்திற்காகவும் நடந்தது போல ஏதோ சாமர்த்தியமா பேசுறதா நினைச்சு பேசி இருக்காங்க. இப்படி ஒரு 50 வருஷமா பொது வாழ்க்கையில் இருக்கிற ஒருத்தவங்க ஒரு முதல்வர் அவர்கள் சொன்னது எவ்வளவு பெரிய ஒரு வடிகட்டின பொய். சப்பை கட்டு.
நான் சொல்லல உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்காங்க. அவங்க சொன்னதெல்லாம் கொஞ்சம் என்னன்னு லைட்டா பார்ப்போமா? அரசு காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்கள் இடம் பேசியது என்பது பொதுமக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்த கூடும் என்றும் நியாயமான விசாரணை மூலமே அந்த சந்தேகத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று கொட்டியதை முதல்வர் அவர்கள் மறந்துவிட்டாரா? எஸ்ஐடி அமைப்பு உத்தரவிட்டார் அல்லவா? அந்த உத்தரவு ஏதோ சட்டத்தின் மீதும் நீதி பரிபாலனத்தின் மீதும் மரியாதை கொண்டவர்கள் போல ஒரு நாடகத்தனமான கொண்டாட்டத்தை திமுகவும், திமுகவிற்கு ஆடரவாக உயர்நீதிமன்ற நீதிபதியும் நடத்தி கூத்தாடி குதூகளித்தனர் அல்லவா? தவெகவிற்கு எதிராகவும், நமக்கு எதிராகவும் உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் தீர்ப்பளித்து விட்டதாக விதந்தோதினர். விழா எடுத்தனர் அல்லவா? அந்த உத்தரவை குறித்து சொல்லும்போது எந்த ஆவணத்தின் அடிப்படையில் அந்த உத்தரவு அமைக்கப்பட்டது? நான் கேட்கல. உச்சநீதிமன்றம் கேட்டு இருக்காங்க. நீதிமன்றம் உரத்த குரலில் கேள்வி கேட்டது. அப்போதும் கூட உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசுக்காக வாதாடிய அறிவார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பதில் சொல்ல இயலாமல் வாய் மூடி மௌனம் காத்ததை நாடே பார்த்ததல்லவா?
இதையும் முதல்வர் அவர்கள் மறந்துவிட்டாரா? பொது வழிகாட்டு முறைகளான எஸ்.ஓ.பி அமைக்கப்பட்டு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த ரிட் மனுவை நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச் தான் கையாள வேண்டும் தனி நீதிபதி பெஞ்ச் கையாளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொன்னதல்லவா? அது மட்டுமா கோரிக்கையே இல்லாமல் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது எந்த வகையில் சரி என்றும் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். இது எல்லாமே அறியாமலோ இல்ல அறியாதது போலவோ உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து பேசினாரோ முதல்வர் அவர்கள். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு இதெல்லாம் எதுவுமே இல்லாம வெறும் பேச்சில் மட்டுமே பேசிக்கொண்டு அரசியல் ஆதாயம் தேட ஆட்டத்தை ஆட தொடங்கிவிட்டார் முதல்வர் அவர்கள். 1969 க்கு அப்புறமே எப்ப கட்சியா அவங்க கைக்கு வந்ததோ இன்னும் குறிப்பா சொல்றேன் 1972 க்கு அப்புறம் கேள்வி கேட்க ஆளே இல்லாம போச்சு. அதுக்கு அப்புறம் இந்த திமுக தலைமை இப்படித்தானே இருக்குது. இப்ப நாங்க கேட்டோமே இந்த சில கேள்விகள். இதெல்லாம் நான் கேக்கல. சுப்ரீம் கோர்ட் கேட்டு இருக்கு. அதனால என்ன புரிய வருது? இந்த கவர்மெண்ட் நடத்துற அந்த விசாரணை மேல சந்தேகம் ஏற்படுதுன்னா அதுக்கு என்ன அர்த்தம்? உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்.
இதெல்லாம் ஏன் எதுக்காகன்னு முதல்வர் அவர்களுக்கு புரியுதா? சுப்ரீம் கோர்ட் சொன்னதோட மட்டும் இல்ல, நிஜத்திலும் இன்னிக்கி மக்களுக்கே இந்த கவர்மெண்ட் மேல இருக்கிற நம்பிக்கை மொத்தமாக மண்ணுக்குள் புதைந்து விட்டது. இதுவாவது முதல்வர் அவர்களுக்கு புரியுதா? புரியலைன்னா 2026 தேர்தல்ல இந்த திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் ஆழமா அழுத்தமா புரிய வைப்பாங்க. அப்ப கூட இவங்க என்ன பண்ணுவாங்க தெரியும்ல. அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டி பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை ஒன்னு வெளியிடுவாங்களே. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அப்படின்னு. அந்த அறிக்கை வெளியிட்டு போய் அறிவாலயத்துக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்குவாங்க. இப்பவே ரெடி பண்ணி வச்சிக்கோங்க. அந்த அறிக்கையை எப்படி மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம், நான் போன பொதுக்குழுவில் சொன்னது தான். இங்க நான் திரும்பவும் சொல்றேன். இயற்கையும், இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியை நம்ம கூடவே நிக்கும் போது என் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார்? தோழர்களே நமக்கு வந்திருக்கிற இந்த இடையூறு வெறும் டெம்ப்ரவரி மட்டும்தான். எல்லாத்தையும் தகர்த்தெறிவோம். மக்களுடன் கைகோர்த்து நிற்போம். மக்களுடைய களத்துல போய் நிற்போம். நம்ம பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பவும் சொல்றேன் 2026ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி. இன்னும் ஸ்ட்ராங்கா மாற போகுது. 100 சதவீதம் வெற்றி நமக்கே. வாகை சூடுவோம் வரலாறு படைப்போம்’’ எனத் தெரிவித்தார்.