41 பேர் இறந்த பிறகு பெரிய குற்றச்சாட்டுகளுக்கு நாம் ஆளானோம். பெரிய பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் கரூர் விவகாரத்தை ரெண்டு நாளில் கடந்து போய் இருக்கலாம் என்கிறார்கள். ஏன் 30 நாள் வரைக்கும் அமைதியா இருக்கீங்க? எனக் கேட்கிறார்கள். 

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. அங்கு பேசிய ஆதவ் அர்ஜூனா ‘‘யார்கிட்ட 30 நாள் இருக்கேன்னு பாத்துட்டு இருக்கீங்களா. அந்த எண்ணத்துக்கு நமக்கு பதில் சொல்ற நேரம் வந்துவிட்டது. நேற்று கோவை மாவட்டத்தில் நம்முடைய சகோதரி மிகப் பெரிய பாலியல் பலாத்காரம் நடந்தது. எல்லாரும் போராட்டம் பண்றாங்க. அதுக்கு உடனே திமுக ஆதரவாளர்கள் அந்த பொண்ணு ஏன் பதினோரு மணிக்கு அங்க போச்சு எனக்கேட்கிறார்கள். திமுகவுக்கு அறிவில்லையா? சுதந்திரம் இருக்கக்கூடிய தமிழ்நாடு. திமுக திருட்டு பசங்கள பத்தி பேசாம அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க. எங்களுக்கு அரசியல் கத்துக் கொடுக்காதீங்க. ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஊழலை தவிர எதுவுமே கிடையாது.

41 பேர் இறந்த பிறகு பெரிய குற்றச்சாட்டுகளுக்கு நாம் ஆளானோம். பெரிய பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் கரூர் விவகாரத்தை ரெண்டு நாளில் கடந்து போய் இருக்கலாம் என்கிறார்கள். ஏன் 30 நாள் வரைக்கும் அமைதியா இருக்கீங்க? எனக் கேட்கிறார்கள். எங்க அம்மா, எங்க அக்கா செத்தால் முப்பது நாள் வீட்டில் தான்டா இருப்பேன். முட்ட பசங்களா. எங்க தலைவருக்கு எங்க தலைவரோட அம்மாக்கு என்ன எமோஷன் இருக்குமோ அதே எமோஷனல்தான். எனக்கும் தெரியும் எந்த இடத்திலுமே இல்லாத ஒரு வரவேற்பு கரூரில் இருந்தது. அந்த பாலத்துக்குள் வரும்பொழுது அவ்வளவு போலீஸ் வந்து வரவேற்பு கொடுத்தது. அந்த ரெண்டு கிலோமீட்டர் கூட்டிட்டு போயிட்டு அந்த இடத்துல பஸ்ஸை நிற்க வைக்கிறார்கள். காவல் துறை மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் சூழ்ச்சியே தெரியாத எங்க தலைவர் காவல்துறைக்கு நன்றி சொல்வாரா? நான் கேட்கிறேன் சூழ்ச்சியா இருக்குறது தான் அனுபவ அரசியலா?

உண்மையில் அந்த அனுபவ அரசியல் எங்களுக்கு வேண்டாம். நாங்க உண்மையாவே இருந்துட்டு போறோம். மக்கள் தலைவர் அப்படித்தான். இங்க இருக்க ஒவ்வொருவரும் அப்படித்தான். நல்லது செஞ்சு மட்டும் தான் இந்த கட்சிக்கு வந்திருக்கிறோம். ரவுடித்தனம் பண்ணி ஆயிரம் கோடி காசு அடிச்சு வெளில ஒண்ணு பேசுறது, டிவில ஒன்னு பேசுறது. தலைவர் கிளம்பிய அடுத்த செகண்ட் நாங்கள் அங்கே சென்றோம். இளைஞர் அணியால் அங்கே நிற்க முடியவில்லை. அங்கே இருக்கிறவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். நாங்கள் அங்கே வந்திருந்தால் அங்கே என்ன நடந்திருக்கும் தெரியுமா? எங்களை சும்மா விட்டு இருப்பார்களா?

கரூரில் உள்ள மெடிக்கல் ஹாஸ்பிடலில் சரியான உபகரணங்களை கிடையாதுனு ரிப்போர்ட் வருது. ஏன் பக்கத்துல பிரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்கவில்லை? தவெக கட்சிக்காரர்கள் ஹாஸ்பிடலுக்கு வரக்கூடாது என நினைத்தார்கள். 75 வருஷம் திமுகவின் சூழ்ச்சி என்னனு எங்களுக்கு தெரியாதா? இதே மாதிரி தான் 97 கோர்ட் ஆர்டர் வாங்கி ஜெயலலிதாவை முடக்கப்பார்த்தார்கள். இந்த ஒரு குடும்பம் மட்டும்தான் அடுத்த நூறு வருஷத்துக்கு வேற யாரும் வரக்கூடாது என நினைக்கிறார்கள். உங்களை யாருமே எதிர்த்து கேக்க கூடாது. யாருமே எதிர்த்து வரக்கூடாது. அரசியலில் ஒரே குடும்பம் இருந்துட்டு போகணும். அன்னைக்கு நைட்டு நடந்த சூழ்ச்சியை பாருங்கள். நம்ம எல்லாம் வெளியே போயாச்சு. திமுக காரங்கள் மட்டும் வந்தாங்களாம். அதுல முதலில் செந்தில் பாலாஜி வந்துட்டாரு. ஸ்ட்ரைட்டா ஷூட்டிங் கேமராவை எடுத்துட்டு வந்துட்டாரு. பக்கா ஷூட்டிங். அதுக்கு அடுத்தது வந்தவரு அன்பில் மகேஷ். அவர்கள் இருவரும் அழுததை வைத்து மக்கள் இது நாடகம் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள். இனி உன் குடும்பத்தார் மிரட்ட முடியாது’’ எனத் தெரிவித்தார்.