அன்றே கணித்த வீரப்பன்… நம்ம தமிழன் ஏமாந்துட்டே தான் போறான்.. வீடியோ வைரல்!
கரூர் அருகே நடந்த விஜய் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வீரப்பனின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி, புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

வீரப்பன் பழைய வீடியோ வைரல்
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டம் பெரும் விபரீதமாக முடிந்தது. இந்தச் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலால் சுவாசம் பெற முடியாமல் பலர் தரையில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காமல் போனதால் உயிரிழப்பு அதிகரித்து, இறுதியில் 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தமிழக அரசியலையே உலுக்கிய துயரச் சம்பவமாகிப் போனது. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை, கூட்டம் கையாளும் திறனில் குறைபாடு இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.
கரூர் சோகம்
மறுபுறம், தவெக ஆதரவாளர்கள் மக்கள் அலைமோதல் காரணமாக காவல்துறை மற்றும் நிர்வாகம் செயலிழந்தது எனக் கூறினர். குற்றச்சாட்டுகள் பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில், உண்மையில் தவறுகள் எங்கே நிகழ்ந்தன என்பது குறித்து சமூகத்தில் கேள்விகள் எழுந்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசு நிதி உதவி அளித்துள்ளது. கூடுதலாக, விஜயும் தனது சொந்த செலவில் நிவாரணத் தொகை வழங்குவதாக உறுதியளித்தார். அரசியல் பிரச்சாரத்தில் அலைமோதும் கூட்டங்களை விட, மக்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இச்சம்பவம் வலியுறுத்துகிறது.
விஜய் சர்ச்சை
இந்தச் சம்பவம், தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத கரும்புள்ளியாக மாறியுள்ளது. பொதுக்கூட்டங்களில் மக்கள் கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் முழுமையாக செய்யப்பட வேண்டும் என்பதற்கான கடுமையான பாடம் இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வீரப்பன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கேரளா மக்கள் இந்த பக்கம் வருவாங்க, நானும் அந்த பக்கம் சில நேரம் போவேன். அப்போ அவங்க சொல்லுவாங்க, அண்ணே உங்க தமிழ் மக்கள் சர்வ சாதாரணமா நடிகர்களுக்கு ஓட்டு போடுறாங்களே? என்ன அநியாயமா இருக்கு.
நடிகர் அரசியல்
மண்டைல மூளையே கிடையாதா அவங்களுக்கு, இங்க கூட கேரளாவுல பெரிய பெரிய நடிகர்கள் இருக்காங்க. ஆனா நின்னா 10 ஓட்டு கூட வாங்க முடியாது. எல்லாரும் சினிமா மேல ஆசைப்படுவாங்க, பார்ப்பாங்க. படம் பாக்குறதோடு நிறுத்திக்குவாங்க. அவங்களுக்கு ஓட்டு போடமாட்டாங்க. அவங்களுக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்? தமிழ் மக்களுக்கு மூளை எப்படி இருக்கும்? என்று கூறி விழுந்து விழுந்து சிரிப்பாங்க. எதை எடுத்தாலும் நம்ம தமிழன் ஏமாந்துட்டே தான் போறான்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ நடிகர்கள் பின்னால் போகும் தமிழர்கள் குறித்த கூட்டம் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது.