- Home
- Tamil Nadu News
- இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்... பார்ப்பனர்களுக்காக படுகொலை செய்தவர் ராமர்... வன்னி அரசு திமிர் பேச்சு
இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்... பார்ப்பனர்களுக்காக படுகொலை செய்தவர் ராமர்... வன்னி அரசு திமிர் பேச்சு
பார்ப்பனர்களுக்காக படுகொலை செய்தவர் தான் ராமர், இந்து மதம் அழிக்கப்பட வேண்டும் என்று பேசி விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.

ஆணவக்கொலைகளுக்கு எதிரான கருத்தரங்கு
ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கு சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. கருத்தரங்கில் அவர் பேசுகையில், “ராமன் வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் செல்லும் போது அங்கே ஒருவன் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருக்கின்றான். அவனிடம் நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என ராமன் கேள்வி கேட்கிறான்.
அப்போது எனது பெயர் சம்பூகன், நான் வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவன். தற்போது தவம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறான். கீழ் ஜாதியைச் சேர்ந்த நீ எப்படி இந்த தர்மத்தைச் செய்ய முடியும்? அந்தந்த ஜாதிக்கு என தர்மம் உள்ளது என்று கூறி தலைமையை வெட்டி படுகொலை செய்கிறான். படுகொலையின் போது தெறித்த ரத்தத்தால் அந்த குழந்தை உயிர்ப்பித்ததாக கதையில் சொல்லப்படுகிறது. இந்த கொலைக்கு பின்னால் ஆணவக் கொலைகளுக்கு பின்னணியில் ஒரு கோட்பாடு உள்ளது. இந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு, வர்ணாசிரம கோட்பாடு. இதனை அழித்தொழிக்க வேண்டும் என அம்பேத்கர் சொல்கிறார்.
இந்து அழிக்கப்படவேண்டிய மதம்
இந்து மதத்தில் சமத்துவம், சமூக நீதி இல்லை. இந்து மதத்தில் ஆகவே இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். இதனால் தான் இந்து மதத்தில் இருந்து அம்பேத்கர் மதம் மாறுகிறார். இந்த படுகொலை எங்கிருந்து தொடங்குகிறது. இந்த கோட்பாட்டை வர்ணாசிரமத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் நுட்பமான அரசியல்.
ராமனும், ராமதாஸ்ம் ஒன்று தான்
ராமன் பார்ப்பனர் கிடையாது ஆனால் பார்ப்பனர்களுக்காக படுகொலை செய்தார். அதே போன்று ராமதாஸ் பார்ப்பனர் கிடையாது ஆனால் பார்ப்பனியர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வேலையை செய்கிறார். கருத்தியல் ரீதியாக ராமதாஸ் செய்வதும், ராமன் செய்ததும் ஒன்று தான்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.