- Home
- Politics
- ‘சத்தியமாச் சொல்றேன்... அம்பேத்கரை விட உயர்ந்தவர் தொல்.திருமா..’! ஓவராகப் புகழ்ந்து தள்ளிய வனிதா ஐ.பி.எஸ்..!
‘சத்தியமாச் சொல்றேன்... அம்பேத்கரை விட உயர்ந்தவர் தொல்.திருமா..’! ஓவராகப் புகழ்ந்து தள்ளிய வனிதா ஐ.பி.எஸ்..!
இவர் களத்தில் இறங்கினார். உங்களை எல்லாம் சந்தித்தார். இன்று வரை தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல ஏசி ரூமில் உட்கார்ந்து பேசவில்லை. அதற்காக நான் அம்பேத்கரை குறைத்து மதிப்பிடவில்லை.

அம்பேத்கர் சிலைக்கு கம்பி வலை
திருமாவளவன் குறித்துப் பேசியுள்ள அவர், ‘‘அம்பேத்கர் ஒரு சாதித்தலைவர் இல்லை. நாம் அப்படி யோசிக்கிற ஒரு சாதித்தலைவர் அவர் இல்லை. அது தெரியுமா உங்களுக்கு... அவர் எல்லோருக்குமான தலைவர். தலைவர்களுக்கு சாதி இல்லை. அப்படி யோசிக்கிற ஒன்றிரண்டு பேரால் அவர்களை கொண்டுபோய் நாம் ஒரு சாதி என்கிற சின்ன அடையாளத்துக்கு வைத்து விட்டோம்.
நான் அம்பையில் இருந்தபோது பார்த்திருக்கிறேன், அம்பேத்கர் சிலைக்கு கம்பி வலை போட்டு வைத்திருக்கிறார்கள். அவரது எத்தனை சிலைகளுக்கு இப்படி கம்பி வலை போடு வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ? எனக்கு தெரியாது.பரிச்சைக்காக சில விஷயங்களை படித்து எழுதிவிட்டு, சில அசைண்மெண்டுக்காக அவரை எழுதி விட்டு வருவோம். அவ்வளவுதான். ஆனால், அவர் ஒரு மேதை சட்ட மேதை.
Vanitha IPS
அந்த அளவுக்கு ஒரு அறிவு இருக்கக்கூடிய இன்னொரு மனிதர் இந்த உலகத்தில் இல்லை. இதை எத்தனை மேடைகளில் நாம் பேசப்போகிறோம்? எத்தனை நாளைக்கு அவரை சொந்த சாதிக்க நீங்கள் கொண்டாட போகிறீர்கள்? அங்கிருந்துதான் நான் வந்தேன். அம்பேத்கர்கூட அவரது வருத்தத்தை பதிவு செய்கிறார். சில மறுப்புக்களின் மூலம் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொல்கிறார். சில ஆங்கிலச் செய்திகளுக்கு பேட்டி கொடுக்கும்போது இந்த சாதி அடுக்குகள் மாற வேண்டும் என்று சொல்கிறார். வருத்தப்படுகிறார், மதம் மாறுகிறார். அவருக்கு தெரிந்த அன்றைய காலகட்டத்தில் சில பேரை மதம் மாற்றுகிறார். அவருக்குத் தெரிந்த அன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய அத்தனை எதிர்ப்புகளையும் அழகாக பதிவு செய்து கொண்டே வருகிறார்.
அம்பேத்கரை விடையும் ஒரு படி உயர்ந்தவர்
ஆனால் நான் ஒன்னு சொன்னா நீங்க யாரு கோபப்படக்கூடாது. அதுவும் சத்தியமான உண்மை. பாபா சாஹேப் அம்பேத்கரை விடையும் ஒரு படி உயர்ந்தவர் டாக்டர்.தொல். திருமாவளவன். ஏனென்றால், இதை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவதற்கான ஒரு தலைவர் இந்த பட்டியலின மக்களிடையே இல்லை. அம்பேத்கர் எழுதினார். யாரும் அவரது பேனாவை பிடித்துப் போட்டிருக்க மாட்டார்கள், பேனாவை ஒடித்துப்போட்டு இருக்க மாட்டார்கள். இவர் களத்தில் இறங்கினார். இதை செயல் வடிவத்துக்கு கொண்டு வருவதற்கான ஒரு தலைவர் இந்த பட்டியலின மக்களிடையே இல்லை அவரை எழுதினார்.
Vanitha IPS
இவர் களத்தில் இறங்கினார். உங்களை எல்லாம் சந்தித்தார். இன்று வரை தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல ஏசி ரூமில் உட்கார்ந்து பேசவில்லை. அதற்காக நான் அம்பேத்கரை குறைத்து மதிப்பிடவில்லை. களப்போராளி என்பது வேறு. வீரம் என்பது வேறு. மக்களை நேருக்கு நேர் சந்திப்பது என்பது வேறு. அத்தனை கெட்ட வார்த்தைகளையும், மலத்தையும், சாணியையும், அவமானங்களையும் சகித்து சகித்து சகித்து... மறுபடியும் இன்னொரு மேடை... மறுபடி இன்னொரு களம் என களமாடினார். இதெல்லாம் சாதாரண மனிதர்களால் முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.