MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுக - தவெக மறைமுக கூட்டணி அம்பலம்! திமுகவுக்காக விஜய்யை டோட்டலாக டேமேஜ் செய்த வன்னி அரசு!

அதிமுக - தவெக மறைமுக கூட்டணி அம்பலம்! திமுகவுக்காக விஜய்யை டோட்டலாக டேமேஜ் செய்த வன்னி அரசு!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், நடிகர் விஜய் திமுக, பாஜக மட்டுமல்லாது அதிமுகவையும் விமர்சித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விஜய் மௌனம் காத்தது ஏன் என வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Aug 22 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக விஜய்
Image Credit : x

தவெக விஜய்

மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய் இதுவரை திமுக, பாஜக மட்டுமே விமர்சித்து வந்த நிலையில் இம்முறை அதிமுகவையும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தங்கை ஸ்னோலின் குறித்து பேசிய விஜய் மறந்தும் கூட, துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த அதிமுக குறித்து வாய் திறக்காதது ஏனோ? என வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

24
விஜய்
Image Credit : Asianet News

விஜய்

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தவெக இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்து விட்டார்கள். முதல் மாநாட்டை விட கூடுதல் நேரம் எடுத்து பேசியுள்ளார் விஜய். இந்த மாநாட்டிலும் கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தி விட்டார். கொள்கை எதிரி பாஜக குறித்து விஜய் பேசும் போது, பொத்தாம் பொதுவாக பேசுகிறாரே தவிர, குறிப்பாக பேசவில்லை. தற்போது கொண்டுவந்துள்ள சனநாயக விரோத மசோதாவான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆளுநர் நீக்குவதற்கு அதிகாரம் குறித்து வாயே திறக்கவில்லை.

Related Articles

Related image1
'மரத்தை நட்டா உடனே பழம் கிடைக்காது'... தவெக-வுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இபிஎஸ்!
Related image2
தவெக மாநாட்டில் ரஜினிகாந்தை சீண்டிய விஜய்! கொந்தளிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!
34
 வன்னி அரசு
Image Credit : F/Vanni Arasu

வன்னி அரசு

பொய் வழக்கு போட்டு 30 நாட்கள் சிறைப்படுத்தி சனநாயகத்தை அச்சுறுத்தும் அம்மசோதா குறித்து விஜய் வாய் திறக்காதது ஏன்? தேர்தல் ஆணையத்தின் வழி வாக்குகளை திருடும் ஆபத்து குறித்து பேசாமல் போனது ஏன்? பேசிய அரை மணிநேத்துக்கும் மேலான உரையில், சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பேசாதது ஏனோ? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தங்கை ஸ்னோலின் குறித்து பேசிய விஜய் மறந்தும் கூட, துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த அதிமுக குறித்து வாய் திறக்காதது ஏனோ?

44
அதிமுக - தவெக மறைமுக கூட்டணி
Image Credit : Asianet News

அதிமுக - தவெக மறைமுக கூட்டணி

திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு சொல்லும் விஜய் அதற்கான ஆதாரத்தை வெளியிடாமல், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன் மொழிந்ததை வழிமொழிந்ததன் மூலம் அதிமுகவும் தவெகவும் தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது. அந்த கூட்டணியில் பாஜகவும் இருப்பதால், அதிமுக- பாஜக கூட்டணியின் மறைமுக கூட்டணி பார்ட்னராகவே விஜய் செயல்படுகிறார் என்பது தான் இந்த மாநாட்டு செய்தி. மற்றபடி இந்த மாநாடு விஜய்யின் லென்த்தான டயலாக் மாநாடு அவ்வளவு தான் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி
டிவி.கே. விஜய்
திமுக
பிஜேபி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved