- Home
- Tamil Nadu News
- ஆட்சியில் பங்கு வேண்டாம்..! பல்டி அடித்த விசிக..! ஆனாலும் மற்றொரு டிமாண்ட்டால் திமுக ஷாக்!
ஆட்சியில் பங்கு வேண்டாம்..! பல்டி அடித்த விசிக..! ஆனாலும் மற்றொரு டிமாண்ட்டால் திமுக ஷாக்!
2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தெரிவித்துள்ளது. ஆனால் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ், விசிக
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவும், காங்கிரசும் கூட்டணி வைத்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளன. இதில் விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.
திருமாவளவன் பேச்சு வைரல்
இது தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவனே பல்வேறு மேடைகளில் கோரிக்கை விடுத்து வந்தார். ''எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். விசிகவின் நிலைப்பாடும் அதுதான். ஏன் நாங்கள் முதலமைச்சருக்கு ஆசைப்படக் கூடாதா? நாங்களும் ஆட்சியில் பங்கு கேட்போம்'' என்று திருமாவளவன் சில மாதங்களுக்கு முன்பு பேசியது வைரலானது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம்
இப்படியாக விசிகவின் பல்வேறு இரண்டாம் கட்ட தலைவர்களும் இதே கோரிக்கையை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என விசிக திடீரென தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை நாங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். 2026ம் ஆண்டில் கூட இது தொடர்பாக தலைவர்களிடம் பேசினோம்.
இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும்
ஆனால் 2026ம் ஆண்டு விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்காது. ஆனால் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்போம். கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றோம். இந்த முறை கண்டிப்பாக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
திமுக அதிர்ச்சி
இந்நாள் வரை ஆட்சியில் பங்கு வேண்டும் எனக்கூறிய விசிக திடீரென ஆட்சியில் பங்கு வேண்டாம் என கூறியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் திமுக நிம்மதி அடைந்துள்ளது. ஆனால் விசிசி இரட்டை இலக்க தொகுதி கேட்பதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.