MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • CM Vijay: முதல்வரே எதுக்கு பயந்து நடுங்குறீங்க.. அநியாயத்தை தட்டிக் கேளுங்கள்.. விஜய்யை லெப்ட் ரைட் வாங்கிய உதயநிதி!

CM Vijay: முதல்வரே எதுக்கு பயந்து நடுங்குறீங்க.. அநியாயத்தை தட்டிக் கேளுங்கள்.. விஜய்யை லெப்ட் ரைட் வாங்கிய உதயநிதி!

Udhayanidhi: ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு உதயநிதி  கடும் கண்டனம் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.

2 Min read
Author : vinoth kumar
Published : May 31 2026, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 திருவள்ளுவருக்கு காவி நிற உடை
Image Credit : Asianet News

திருவள்ளுவருக்கு காவி நிற உடை

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மரியாதை செலுத்திய திருவுருப்படத்தில், திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
Image Credit : Asianet News

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?

Related Articles

Related image1
Leema Rose: என் மீது களங்கம் விளைவிக்கப் பார்த்தார்கள்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீமா ரோஸ்!
Related image2
Government Employees: அரசு ஊழியர்கள் இனி லேட்டா போனா ஆப்பு தான்! நாளை முதல் அமலாகிறது! முதல்வர் விஜய் அதிரடி.!
35
சோஃபா மாடல் அரசு
Image Credit : x

சோஃபா மாடல் அரசு

திமுக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

45
அமைச்சர் அருண்ராஜ் எக்ஸ் தள பதிவு
Image Credit : Asianet News

அமைச்சர் அருண்ராஜ் எக்ஸ் தள பதிவு

வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம் என அமைச்சர் அருண்ராஜ் எக்ஸ் தள பதிவிட்டுள்ளார். அதில் திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு. திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது.

55
வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்
Image Credit : Asianet News

வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது.

வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலின்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Employees: அரசு ஊழியர்கள் இனி லேட்டா போனா ஆப்பு தான்! நாளை முதல் அமலாகிறது! முதல்வர் விஜய் அதிரடி.!
Recommended image2
சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்! ஜூன் 1 முதல் புதிய டைம் டேபிள்!
Recommended image3
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Related Stories
Recommended image1
Leema Rose: என் மீது களங்கம் விளைவிக்கப் பார்த்தார்கள்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீமா ரோஸ்!
Recommended image2
Government Employees: அரசு ஊழியர்கள் இனி லேட்டா போனா ஆப்பு தான்! நாளை முதல் அமலாகிறது! முதல்வர் விஜய் அதிரடி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved