MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Leema Rose: என் மீது களங்கம் விளைவிக்கப் பார்த்தார்கள்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீமா ரோஸ்!

Leema Rose: என் மீது களங்கம் விளைவிக்கப் பார்த்தார்கள்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீமா ரோஸ்!

அதிமுகவில் பிளவுகளை ஏற்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார். எடப்பாடியார் தலைமையில் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக உழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 30 2026, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு
Image Credit : Asianet News

அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுக சலசலப்பு ஏற்பட்டது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். தேர்தல் தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் என்று சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி வந்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள இவ்வளவு பிரச்சனைகளுக்கும் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் ஐஜேகே லீமா ரோஸ் தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லீமா ரோஸ் மீது குற்றச்சாட்டு
Image Credit : Asianet News

லீமா ரோஸ் மீது குற்றச்சாட்டு

எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்தை, பணத்தை வைத்து சூறையாடவே, லீமா ரோஸை அதிமுகவில் ஐக்கியமாக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இந்நிலையில் அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு என அதிமுக மகளிர் அணி இணைச்செயலாளரும், லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் மார்டின் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Related image1
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Related image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
35
லீமா ரோஸ் மார்டின் பரபரப்பு அறிக்கை
Image Credit : Asianet News

லீமா ரோஸ் மார்டின் பரபரப்பு அறிக்கை

அதில், அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின.

45
எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம்
Image Credit : Asianet News

எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மா அவர்களால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு. பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணுகிறேன். தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி மலர்ந்திட கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம் தெரிவித்துள்ளார்.

55
முதலில் விஜய் ஆதரவு தெரிவித்த லீமா ரோஸ்
Image Credit : Asianet News

முதலில் விஜய் ஆதரவு தெரிவித்த லீமா ரோஸ்

முன்னதாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை நடத்தியது. வெளியே வந்த லீமா ரோஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
Cauvery Calling: 13 கோடி மரங்கள் நட்டு 'காவேரி கூக்குரல்' சாதனை! வறண்ட நிலத்திலும் விவசாயிகளுக்கு வருமான மழை!
Related Stories
Recommended image1
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Recommended image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved