- Home
- Tamil Nadu News
- வாரத்தில் 1 நாள் மட்டும் சுற்றுப்பயணம், 6 நாள் ரெஸ்ட்..! 4 மாதத்தில் வெறும் 16 நாள் மட்டும் மக்களை சந்திக்கும் விஜய்
வாரத்தில் 1 நாள் மட்டும் சுற்றுப்பயணம், 6 நாள் ரெஸ்ட்..! 4 மாதத்தில் வெறும் 16 நாள் மட்டும் மக்களை சந்திக்கும் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் எந்தெந்த தினங்களில் எந்தெந்த பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் விஜய்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, தேமுதிக, திமுக.வைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகின்ற 13ம் தேதி முதல் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். 13ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் விஜய் மதுரையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
திருச்சி டூ மதுரை
வடதமிழகமான விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாடு, தென் மாவட்டமான மதுரையில் கட்சியின் இரண்டாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய் தனது பிரசாரத்தை தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் தொடங்குகிறார். 13ம் தேதி திருச்சியில் தொடங்கும் சுற்றுப்பயணம் அன்றைய தினமே பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.
சுற்றுப்பயணத்திற்கு சனிக்கிழமைகளை மட்டும் தேர்வு செய்த விஜய்
செப்டம்பர் 20ம் தேதி (சனி கிழமை) நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, 27ம் தேதி (சனி கிழமை) திருவள்ளூர், வடசென்னை.
அக்டோபர் 04ம் தேதி (சனி கிழமை), ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு.
11ம் தேதி (சனி கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி.
18ம் தேதி (சனி கிழமை) காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
25ம் தேதி (சனி கிழமை) தென்சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நவம்பர் மாத சுற்றுப்பயணம்
நவம்பர் 01ம் தேதி (சனி கிழமை) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர்,
08ம் தேதி (சனி கிழமை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,
15ம் தேதி (சனி கிழமை) தென்காசி, விருதுநகர்,
22ம் தேதி (சனி கிழமை) கடலூர்,
29ம் தேதி (சனி கிழமை) சிவங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டிசம்பர் மாத சுற்றுப்பயணம்
டிசம்பர் 06ம் தேதி (சனி கிழமை) தஞ்சாவூர், புதுக்கோட்டை,
13ம் தேதி (சனி கிழமை) சேலம், நாமக்கல், கரூர்,
20ம் தேதி (சனி கிழமை) திண்டுக்கல், தேனியைத் தொடர்ந்து மதுரையில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.