MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி செல்வோம்.. ஆட்சி பீடத்தை வெல்வோம்.. TVK விஜய் கடிதம்

அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி செல்வோம்.. ஆட்சி பீடத்தை வெல்வோம்.. TVK விஜய் கடிதம்

தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 02 2026, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா..
Image Credit : Asianet News

தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா..

தமிழக வெற்றி கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சி சார்பில் இன்று விமரிசையாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைவர் விஜய் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைவர் விஜய் கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.

23
அரசியல் பயணத்திற்கு முன்பே மக்களுக்காக நின்றவர்கள் நாம்..
Image Credit : X/TVKVijayHQ

அரசியல் பயணத்திற்கு முன்பே மக்களுக்காக நின்றவர்கள் நாம்..

முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.

Related Articles

Related image1
விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?
Related image2
Now Playing
விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
33
தவெக வருகையால் இதுவரை இல்லாத சூழல்
Image Credit : X/TVKVijayHQ

தவெக வருகையால் இதுவரை இல்லாத சூழல்

2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுக தனிக்கட்சி அல்ல; பாஜகவின் கிளை அமைப்பு.. போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
Recommended image2
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்துக்கு பலன்.. வளர்ச்சி பாதையில் இந்தியா.. பாராட்டித் தள்ளிய இபிஎஸ்!
Recommended image3
Union Budget 2026: தேர்தல் நேரத்திலும் தமிழகம் கண்ணுக்கு தெரியலையா? பெரிய ஏமாற்றம்.. கொந்தளித்த ஸ்டாலின்
Related Stories
Recommended image1
விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?
Recommended image2
Now Playing
விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved