விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?
சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை ஷோபா. தன் அம்மா ஷோபாவுக்காக சென்னை, கொரட்டூரில் ஒரு பாபா கோயிலையே கட்டிக் கொடுத்திருக்கிறார் விஜய். ஆனால், விஜய் எந்த கோவிலுக்கும் செல்கிற பழக்கம் இல்லாதவர்.

விஜய் என்ன செய்தாலும் பிரச்னை தான். விஜய் இப்போது சினிமாவை விட்டு முழுநேர அரசியலுக்கு தயாராகிறார். ஆனால் அவருக்கு வரும் சோதனைகள் அவரது பயணத்தை சவாலாக்கியுள்ளன. அவரது ஆதரவாளர்கள் "சோதனை தாண்டி வெற்றி பெறுவார்" என்று நம்புகிறார்கள். ஆனால் அரசியல் எதிரிகள் "விஜய் ஓவர்" என்று கிண்டல் செய்கிறார்கள். உண்மையில் இது அரசியல் நுழைவின் இயல்பான சோதனைகள் தான். இந்நிலையில், முதல் தேர்தலில் மகன் நினைத்ததை சாதிக்க வேண்டும் என விஜயின் நீலாங்கரை வீட்டில் ஷோபா சிறப்பு பூஜை செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை ஷோபா. தன் அம்மா ஷோபாவுக்காக சென்னை, கொரட்டூரில் ஒரு பாபா கோயிலையே கட்டிக் கொடுத்திருக்கிறார் விஜய். ஆனால், விஜய் எந்த கோவிலுக்கும் செல்கிற பழக்கம் இல்லாதவர். கரூர் சம்பவம், ஜனநாயகம் சென்சார் பிரச்சினை என விஜய்க்கு வந்திருக்கிற சோதனைகளை கடந்து தேர்தலில் விஜயின் வியூகங்கள் நிறைவேற வேண்டும் என்று அவரது நீலாங்கரை வீட்டில் மகனை உட்கார வைத்து யாகம் செய்து பூஜை செய்து இருக்கிறார் ஷோபா. கூடவே விஜய்யின் கையில் ஒரு காப்பும் போட்டு ‘‘இனி உனக்கு பாபா துணையிருப்பார். துணிந்து களத்தில் இறங்கு’’ என்று ஆசீர்வாதம் செய்திருக்கிறாராம் விஜயின் அம்மா ஷோபா.
