- Home
- Tamil Nadu News
- திமுக ஒரு தீய சக்தி..! வெறிகொண்டு கத்திய விஜய்..! எம்ஜிஆர் ஜெயலலிதா சொன்னது ரொம்ப சரி!
திமுக ஒரு தீய சக்தி..! வெறிகொண்டு கத்திய விஜய்..! எம்ஜிஆர் ஜெயலலிதா சொன்னது ரொம்ப சரி!
ஈரோடு விஜயமங்கலத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், திமுக அரசை ஒரு 'தீய சக்தி' என கடுமையாக விமர்சித்தார். சொன்னதை செய்யாத திமுக அரசு, தவெகவை முடக்க நினைப்பதாகவும், மக்கள் விரோத அரசை வீழ்த்த மக்கள் சக்தி தேவை எனவும் முழங்கினார்.

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதேபோல் களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம் அதிமுகவை மறைமுகமாக சாடினார். பொதுகூட்டத்தில் பேசிய விஜய்: சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று திமுக அரசு செயல்படுகிறது. எங்களுக்கு தவெகவை கண்டு பயமில்லை பயமில்லை என்று சொல்லிக் கொண்டே கதறுகிறார்கள்.
மாறுவேடத்தில் மரு வைத்துக் கொண்டு வருபவர்கள், மண்டை மீது இருக்கும் கொண்டையை மறைக்க வேண்டும். விஜய்யை, தவெகவை எப்படி முடக்கலாம் என்றே 24 மணிநேரமும் அரசு சிந்தித்து வருகிறது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஏன் திமுகவை இப்படி விமர்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டி. திமுக ஒரு தீய சக்தி என ஈரோடு பிரச்சாரக் கூட்டத்தில் ஆக்ரோஷமாக பலமுறை விஜய் முழங்கினார்.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பொய் வாக்குறுதி என எதில் உங்கள் கேரக்டரை புரிந்து கொள்ள வேண்டும் சி.எம். சார். என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டாங்க முதல்வர் பேசியது சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் பேசியது சினிமா டயலாக் இல்லையா? அது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்து பேசினீர்கள். நான் பேசினால் சினிமா டயலாக், முதல்வர் பேசினா அது சினிமா டயலாக் இல்லையா? சொன்னதை செய்யாமல் இருக்க நாங்கள் என்ன வாயிலே வட சுடும் திமுகவா நாங்கள் தவெக.
நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவம்னு சொல்லி அசிங்கப்படுத்துறதுல எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசுல மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம்னு சொல்வீங்க என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும். செங்கோட்டையன் அண்ணன் போல் இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள். தவெகவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

