திமுக எனும் தீய சக்தியை தமிழக வெற்றி கழகத்தால் மட்டும் தான் வீழ்த்த முடியும். அண்ணன் செங்கோட்டையன் நம்முடன் இணைந்துள்ளது நமக்கு மிகப்பெரிய பலம் என விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக உரையாற்றினார். மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக சாடிய விஜய், “அண்ணா, எம்ஜிஆர் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. அண்ணா, எம்ஜிஆரை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று யாரும் அழ முடியாது. அண்ணா, எம்ஜிஆரிடமிருந்து தேர்தல் அணுகுமுறைகளை தவெக எடுத்துக் கொண்டது.

ஆட்சியாளர்களுக்கான உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்துள்ள காசு தான் துணை. ஆனால் எனக்கு என்மேல் எல்லையில்லா பாசம் வைத்துள்ள மக்கள் தான் எனக்க துணை. திமுகவும், பிரச்சினைகளும் பெவிகால் போட்டு ஒட்டியது போன்றது. இதனை பிரக்கவே முடியாது.

மக்கள் காசுல மக்களுக்கு செய்றதுலாம் எப்படிங்க இலவசம்னு சொல்லலாம். அப்படியே செஞ்சிட்டாலும் ஓசி ஓசினு அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க. என்ன கேக்றதுக்கு ஆள் இல்லன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? இந்த விஜய் வந்து நிப்பான். கேள்வி கேப்பான். நாங்க ஒரு வழியில அரசியல் செய்து கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தான் தவெக ஒரு பொருட்டே இல்லை. பின் எதற்காக கதறுறீங்க? புலம்பித் தள்ளிட்டு இருக்கீங்க?

திமுக எனும் தீய சக்தியை அழிக்க தமிழக வெற்றி கழகம் எனும் தூய சக்தியால் தான் முடியும். நம்முடன் அண்ணன் செங்கோட்டையன் வந்துள்ளது நமக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரைப் போன்று இன்னும் பலர் வரவிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.