தமிழக மக்களுக்கும் எனக்குமான தொடர்பு நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தொடர்கிறது. இந்த உறவை யாராலும் பிரிக்க முடியாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், “தமிழக மக்களுக்கும், எனக்கும் இடையேயான உறவை சிலர் கெடுக்க நினைக்கின்றனர். அவதூறுகளைப் பரப்ப நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது இந்த உறவு எனக்க 10 வயதில் தொடங்கியது என்று.
இந்த உறவை யாராலும் பிரிக்க முடியாது. உங்களை நம்பி தான் வந்திருக்கிறேன். இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் மக்கள் கைவிட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். ஆட்சியாளர்களுக்கு அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் காசு தான் பலம். ஆனால் எனக்கு இந்த மக்கள் தான் பலம்” என்று தெரிவித்துள்ளார்.


