MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Budget 2026: தமிழக அரசின் அதிரடி திட்டம்... வீடுகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் அறிவிப்பு - யாருக்கெல்லாம் கிடைக்கும்?

TN Budget 2026: தமிழக அரசின் அதிரடி திட்டம்... வீடுகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் அறிவிப்பு - யாருக்கெல்லாம் கிடைக்கும்?

TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் பல அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று தான் வீடுகளில் சோலார் பேனல் திட்டம். அந்த திட்டத்தின் மூலம் 1 லட்சம் மானியம் பெற முடியும்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 05 2026, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Tamil Nadu Budget 2026
Image Credit : Asianet News

Tamil Nadu Budget 2026

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், வீட்டு மின் செலவைக் குறைப்பதுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவ ஊக்குவிக்கும் புதிய மானியத் திட்டத்தை நிதியமைச்சர் டாக்டர் என். மேரி வில்சன் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம், தங்களது வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் தகுதியான குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மின் உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது.

TN Budget 26 - 27: சிங்கப்பூர் போல மாறப்போகும் சென்னை! கூவம் ஆற்றில் படகு சவாரி... தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்புகள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
முதல் கட்டத்திற்கு ரூ.50 கோடி
Image Credit : X

முதல் கட்டத்திற்கு ரூ.50 கோடி

திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகமான குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் பயனை பெறும் வகையில் மாநிலம் முழுவதும் கட்டம் கட்டமாக செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. வீட்டிலேயே சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் மாதாந்திர மின் கட்டணச் செலவை குறைக்க முடியும். குறிப்பாக கோடைக்காலங்களில் அதிகரிக்கும் மின் பயன்பாட்டை சமாளிக்க இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என அரசு நம்புகிறது.

33
நெட் மீட்டரிங் வசதியும் கிடைக்கும்
Image Credit : X

நெட் மீட்டரிங் வசதியும் கிடைக்கும்

இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை மின் வலையமைப்புக்கு (Grid) அனுப்பும் நெட் மீட்டரிங் வசதியும் வழங்கப்படும். இதன் மூலம் மின் கட்டணத்தில் சலுகை பெறுவதோடு, சிலருக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் உருவாகும். சூரிய ஆற்றலை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் நிலக்கரி உள்ளிட்ட மரபு எரிபொருட்களின் பயன்பாடு குறையும். இதனால் கார்பன் உமிழ்வு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்த மானியத் திட்டம் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) இணைந்து செயல்படுத்த உள்ளன. தகுதியான மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும். சோலார் மானியத் திட்டத்துடன் சேர்த்து, மாணவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வீட்டு மின் செலவைக் குறைக்கும் சோலார் மானியத் திட்டம் முதல் கல்வி, தொழில்நுட்பம், பெண்கள் நலன் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த பட்ஜெட் அறிவிப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு பட்ஜெட்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Related Stories
Recommended image1
தமிழக பட்ஜெட் 2026 - 27: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் + பட்டுப்புடவை..! யாருக்கு கிடைக்கும்?
Recommended image2
தமிழக பட்ஜெட் 2026 : பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் உடன் சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved