MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Rain Alert: சென்னை டூ கன்னியாகுமரி! 5 நாட்களுக்கு அடித்து ஊத்தப்போகும் மழை! மக்களே எச்சரிக்கை!

TN Rain Alert: சென்னை டூ கன்னியாகுமரி! 5 நாட்களுக்கு அடித்து ஊத்தப்போகும் மழை! மக்களே எச்சரிக்கை!

TN Rain Alert: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கனமழை கொட்டித்தீர்க்க போகிறது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 04 2026, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தென்மேற்கு பருவமழை தொடங்கியது
Image Credit : Asianet News

தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று (04-06-2026) துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை மேலும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா - கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இன்று (4 ஜூன் 2026) முன்னேறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தமிழகத்தில் கனமழை பெய்யும்
Image Credit : Asianet News

தமிழகத்தில் கனமழை பெய்யும்

ஜூன் 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை டூ கன்னியாகுமரி

ஜூன் 5ம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!
Related image2
TN Rain Alert: தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் போட்டுத் தாக்கப் போகும் மழை! வானிலை அலர்ட்!
34
கோவை, தேனி
Image Credit : our own

கோவை, தேனி

6ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

7ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

44
தென்காசி, நெல்லை
Image Credit : Google

தென்காசி, நெல்லை

8ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 9ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மழை செய்திகள்
வானிலை அறிக்கை
கனமழை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்
Recommended image2
Now Playing
எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியே இல்லை! – உதயநிதி பேச்சைக் கேட்டு பொங்கி எழுந்த நிர்மல் குமார்!
Recommended image3
Now Playing
உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் !
Related Stories
Recommended image1
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!
Recommended image2
TN Rain Alert: தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் போட்டுத் தாக்கப் போகும் மழை! வானிலை அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved