- Home
- Tamil Nadu News
- யாரிடமும் மண்டியிடதாவன் நான்! என்னை யாரும் குறைத்து மதிப்பிடாதீங்க! டிடிவி. தினகரன் சரவெடி பேச்சு!
யாரிடமும் மண்டியிடதாவன் நான்! என்னை யாரும் குறைத்து மதிப்பிடாதீங்க! டிடிவி. தினகரன் சரவெடி பேச்சு!
2024 மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததாகவும், நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.

ttv dhinakaran
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமமுக சார்பில் உழைப்பாளர் தின பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: அமமுக கட்சி எப்போதும் யாரிடமும் மண்டியிடாமல், சமரசம் செய்யாமல் இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. புலி பதுங்குவது பாய்வதற்குதான். ஆகையால் என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம். நான் அமைதியானவன், பொறுமையானவன் தான். அதே நேரத்தில் அழுத்தமானவன். அமமுகவின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து உறுதியாக செயல்படுவேன்.
தீய சக்தி திமுக
தமிழகத்ததின் தீய சக்தி திமுகவை வீழ்த்த யார் பெரியவர், யார் சிறியவர் என்ற எண்ணத்தையெல்லாம் விட்டவிட்டு அனைவரும் ஒரணியில் திரள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இணைந்திருக்கிறது. தீய சக்தி திமுகவை வீழ்த்துவது தான் நமது தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். அதனை நிறைவேற்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அமமுக தியாகங்கள் செய்யத் தயாராக இருந்தது. ஆனால், அதனை சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் திமுக ஆட்சியை பிடித்தது.
mk stalin
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதராமல் கிடைக்க அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் தான் உண்மையான அம்மாவின் ஆட்சியை உருவாக்க முடியும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்.
ttv dhinakaran
நிபந்தனையற்ற ஆதரவு
2024 மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் தெரிவித்தோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

