MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு! இபிஎஸ் திடீர் வாபஸ்! என்ன காரணம்? பரபரப்பு தகவல்!

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு! இபிஎஸ் திடீர் வாபஸ்! என்ன காரணம்? பரபரப்பு தகவல்!

Edappadi Palanisamy Withdraws Case Against TTV Dhinakaran: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மீதான வழக்கை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுள்ளார். கூட்டணி அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Apr 17 2025, 07:50 AM IST| Updated : Apr 17 2025, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TTV Dhinakaran

TTV Dhinakaran

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா, துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த டிடிவி தினகரன்  ஆகியோர் 2017ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அதிமுக கொடியை போன்று கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்தி இருந்தார்.

24
OPS Vs EPS

OPS Vs EPS

 உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிிலையில் அதிமுக போன்ற ஒரு கொடியை பயன்படுத்தவும்,  ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2019ம் ஆண்டு அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். 

இதையும் படிங்க: 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.! அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சபாநாயகர்- சட்டசபையில் அமளி

34
Case withdrawal

Case withdrawal

வழக்கு வாபஸ் பெற்றார் இபிஎஸ்

மேலும், 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்கு நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும் இதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்தார். அதற்கு டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் சம்மதம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதி டிடிவி. தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் அறிக்கை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

44
2026 Assembly Election Alliance

2026 Assembly Election Alliance

கூட்டணி கணக்கு

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. பாஜக கூட்டணியில் ஏற்கனவே அமமுக, ஓபிஎஸ் தரப்பு இருந்து வரும் நிலையில் டிடிவி.தினகரனுக்கு எதிராக வழக்கு வாபஸ் பெற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved