- Home
- Tamil Nadu News
- 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.! அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சபாநாயகர்- சட்டசபையில் அமளி
3 அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.! அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சபாநாயகர்- சட்டசபையில் அமளி
தமிழக சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி மறுத்ததால் அதிமுக வெளிநடப்பு செய்தது.

Tamil Nadu Assembly no-confidence motion : அமலாக்கத்துறை அடுத்தடுத்து தமிழக அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்று இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனை கண்டித்து அமைச்சர் பொறுப்பில் உள்ள செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என அதிமுக, பாஜக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
அடுத்ததாக அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் மற்றும் மகன் அருணை குறிவைத்தும் சோதனை நடைபெற்றது. அடுத்ததாக அமைச்சர் பொன்முடி பெண்கள் தொடர்பாகவும் மத ரீதியாகவும் ஆபாச கருத்தை தெரிவித்திருந்தார்.
Tamil Nadu Assembly
அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக சார்பாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடிதம் மீது விவாதம் நடத்த அனுமதி மறுத்த நிலையில் நேற்று சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இன்றும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கடிதம் வழங்கப்பட்டது குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
No confidence motion
அனுமதி மறுத்த சபாநாயகர்
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து பரிசீலனையில் உள்ளதாகவும், தற்போது எடுத்துக்கொள்ள முடியாது என கூறினார். இதனால் அதிமுகவினர் கூச்சல் எழுப்பினர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பேரவை விதி 72ல் தெளிவாக உள்ளதாகவும், தீர்மானம் கொடுப்பதில் தவறு இல்லை என்றும், தீர்மானம் கொடுக்கலாம், அதை சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.
Tamil Nadu Assembly ADMK walkout
வெளிநடப்பு செய்த அதிமுக
இந்த நிலையில் 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டும் சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததோடு சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகரை கண்டித்து கோஷங்களை எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர்களின் மீது விதியின் 72 இன் கீழ் அமைச்சரின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் இந்த தீர்மானத்தில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.