- Home
- Tamil Nadu News
- வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய டிடிஎப் வாசன்! வெறும் கையோடு திருப்பி அனுப்பிய கோர்ட்!
வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய டிடிஎப் வாசன்! வெறும் கையோடு திருப்பி அனுப்பிய கோர்ட்!
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
இதற்கிடையே அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருதாக கூறி டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி மாலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, ஆறு மாதங்கள் கடந்து விட்டால் லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றில்லை. உரிய அதிகாரிகளை அணுகலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.