திடீர் மாரடைப்பு! திருச்சி முன்னாள் மேயர் துடிதுடித்து உயிரிழப்பு!
திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், 31-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ். சுஜாதா(54) மாரடைப்பால் உயிரிழப்பு. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர்.

காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரும் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், 31-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ். சுஜாதா(54) மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர். மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக நியமிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ப. சிதம்பரம் நேரடியாக வலியுறுத்தினார்.
அந்த அளவுக்கு திருச்சி அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்த சுஜாதா இன்று மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக, விசிக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த கையோடு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு நாளை காலை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெற இருக்கின்றது.