குழந்தைகளை கொடூரமான கொன்ற குன்றத்தூர் அபிராமி எடுத்த அதிரடி முடிவு!
சென்னையை அடுத்த குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும், கள்ளக்காதலனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குன்றத்தூர் அபிராமி
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் அபிராமி . இவரது கணவர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் இருந்துள்ளனர்.
குழந்தைகள் கொலை
இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தது மட்டுமல்லாமல் அறிவுரையும் வழங்கினார். இந்நிலையில், கணவனை கைவிட்டுவிட்டு, சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். இதற்கு தடையாக இருந்த குழந்தைகளை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பித்து செல்ல முயன்றவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து இவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அபிராமிக்கு ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு சுமார் 8 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 24ம் தேதி நீதிபதி செம்மல் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு வருடம் சிறையில் இருந்து விட்டேன். எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் அபிராமி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில் மகளிர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை ரத்து நிறுத்தி வைக்கக்கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபததி எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.