- Home
- Tamil Nadu News
- குன்றத்தூர் அபிராமி வழக்கு! அதிகாலை 3.30 மணி வரை! நீதிபதியின் 200 பக்க தீர்ப்பில் இருப்பது என்ன?
குன்றத்தூர் அபிராமி வழக்கு! அதிகாலை 3.30 மணி வரை! நீதிபதியின் 200 பக்க தீர்ப்பில் இருப்பது என்ன?
குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் தப்பிக்க முயன்ற அபிராமி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

குன்றத்தூர் அபிராமி
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையை சேர்ந்த அபிராமி கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலுடன் தப்பிக்க முயற்சித்த போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு முதலில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திலும் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திலும் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கை நீதிபதி செம்மல் விசாரித்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். காலை 10 மணியில் இருந்து 10.30க்குள் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், காலை 11.30 மணிக்கு மேல் தான் புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காலதாமதமாக அழைத்து வந்த போலீசாருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி செம்மல் இந்த வழக்கிற்கான தீர்ப்பை அதிகாலை 3.30 மணி வரை அமர்ந்து எழுதிவிட்டு சென்றிருக்கிறேன் என்றால் இந்த வழக்கு எந்த அளவுக்கு என்னை பாதித்து இருக்கும் என்று பாருங்கள். இருவரையும் நீதிமன்றம் அழைத்து வருவதற்கு காலதாமத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்போவதாக எச்சரித்தார்.
முகமூடியை கழற்ற சொன்ன நீதிபதி
அப்போது காவல் ஆய்வாளர் அய்யா எனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். இதனால் காலதாமதம் என்று கூறி காவல் ஆய்வாளர் வருத்தம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டு மதியம் 12 மணிக்கு மற்ற அனைத்து வழக்குகளின் விசாரணையையும் தள்ளி வைத்துவிட்டு அபிராமி வழக்கை கையில் எடுத்து நீதிபதி செம்மல் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்டு நின்ற அபிராமியையும் முக கவசம் அணிந்த மீனாட்சி சுந்தரத்தையும் அதனை கழற்ற உத்தரவிட்ட நீதிபதி இப்படி மூடிக்கொண்டு நின்றால் இவர்கள்தான் என்று எப்படி அடையாளம் காண முடியும் என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். உடனடியாக இருவரும் முகமூடியை கழட்டினர். தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி இந்த இந்த கொலை வழக்கில் குற்றத்திற்கு மூல காரணமாக இருந்ததால் முதல் குற்றவாளி அபிராமியும் என்றும் மீனாட்சி சுந்தரம் இரண்டாவது குற்றவாளி என்றும் தான் மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்து தண்டனை குறித்த விவரங்களை வாசிப்பதாக கூறி சென்றார். ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே நீதிபதி செம்மல் நீதிமன்றத்திற்கு திரும்பினார்.
தண்டனை அறிவிக்காமல் என்னால் எப்படி சாப்பிட முடியும்
இப்படியான குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும். அதனால் தண்டனை விவரத்தை வாசித்த பின்னரே சாப்பிட இருப்பதாக தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். இந்த வழக்கில் அபிராமிக்கு மீனாட்சி சுந்தரத்திற்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் இருந்தாலும் நமது வாழ்வது காந்தி தேசம் கண்ணுக்கு கண்ணு, பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று பழிக்கு பழியாக தண்டனை வழங்க முடியாமல் சூழ்நிலை தடுக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி கூட ஒரு வழக்கின் தீர்ப்பின் இதனை சுட்டிக்காட்டி இருக்கிறார். பல வழக்குகளை உதாரணமாக சொல்ல முடியும். இருந்தாலும் நீங்கள் இருவரும் செய்து இருக்கக்கூடிய குற்றம் கொடூரமானது. ஒரு தாயே தான் பெற்ற இரண்டு குழந்தைகளை தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தாயும் தான் பத்து மாதம் சுமந்து பெருகின்ற பிள்ளைகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பார்கள். அந்த இரண்டு குழந்தைகளும் இந்த பூமிக்கு எவ்வளவு கனவுடன் வந்திருக்கும் உங்கள் காம இச்சைக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவர்களை கொலை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
இது மன்னிக்க இயலாத குற்றம்
உங்களுக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லையென்றால் பிரிந்து சென்றிருக்கலாமே, குழந்தைகளை கொலை செய்ய வேண்டிய அவசியமே இல்லையே, நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவம் இருக்கிறார்கள். அப்படி இருக்க இது மன்னிக்க இயலாத குற்றம். எனவே முதல் குற்றவாளி என அபிராமிக்கும் அவருக்கு இணையான மீனாட்சி சுந்தரத்துக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன். மேலும் இருவருக்கும் மொத்தம் 15,000 ரூபாய் அபராதமும் அதை செலுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் இருவரும் கதறி அழுதனர்.
இறக்கம் காட்ட இயலாது
அப்போது மீனாட்சி சுந்தரம் அழுது கொண்டே தான் ஏற்கனவே ஏழு வருடங்கள் சிறை இருந்துவிட்டேன். எனது தாய் தந்தை இருவரும் 70 வயதை கடந்தவர்கள் அவர்களுக்கு உடனிருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரண்டு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும். இறக்கம் காட்ட இயலாது என்றார் நீதிபதி செம்மல். அதேபோல அபிராமியும் தான் பெற்றோரை கவனித்துக் கொண்டு மீதி காலத்தை கழிக்க வேண்டும். அதனால் தனது தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உங்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்ற நிலையிலேயே காந்தி தேசம் என்ற அந்த தண்டனையை வழங்க இயலவில்லை. நீங்கள் இரு குழந்தைகள் கொலை செய்வதற்கு முன்பாக இவற்றையெல்லாம் யோசித்து இருக்க வேண்டும் என்று இருவரது கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதி செம்மல் இருவரும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவிட்டார்.
200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு
200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகளில் பல்வேறு புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கில் மொத்தம் கணவர் விஜய், ஹாவுஸ் ஓனர் கவிதா ராமாகிருஷணன் உள்ளிட்ட 22 பேர் முதலில் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். மேலும் ஏழு சாட்சிகள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் 25 பேர் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாட்சியாக சேர்க்கப்பட்ட அபிராமியின் தந்தை சகோதரர் பிரசன்னா உள்ளிட்ட நான்கு பேரை விசாரிக்கவில்லை. கொலைக்கு 15 நாட்களுக்கு முன்பாக மீனாட்சிசுந்தரம் வீட்டில் அபிராமி தங்கியிருந்ததை சிறுவன் அஜய் தங்களிடம் காட்டிக் கொடுத்த நாளிலிருந்தே அந்த குழந்தைகள் மீது அபிராமி கோபத்தில் இருந்ததாக கூறினார் கணவர் விஜய். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தன்னை சந்தித்த அபிராமி தந்தை நீங்கள் சாட்சியை மாற்றி சொன்னால் அபிராமிக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும் என்று கூறியதாகவும் தான் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் விஜய் சாட்சியம் அளித்திருந்தார். இரு குழந்தைகளுக்கும் இரு வேறு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் அது நஞ்சாகி இரு குழந்தைகளை உயிழப்புக்கு காரணமானதாக பிரேத பரிசோதனையில் மற்றும் தடவியல் அறிவியல் உறுதி செய்யப்பட்டது. இந்த கொலை குறித்து காதலுடன் அபிராமி பேசிய ஆடியோ மற்றும் செல்போன் உரையாடல்களும் முக்கிய ஆதாரமாக அமைந்தன.
ஹவுஸ் ஓனர் சாட்சி
கொலைக்கு பின்னர் நகையை அடமானம் வைத்து 17,000 ரூபாய் பணம் பெற்று கோயம்பேட்டுக்கு சென்று ஸ்கூட்டியை விட்டு நாகர்கோவிலுக்கு தப்பி செல்ல முயன்றதை போலீசார் ஆதாரம் மட்டும் சாட்சித்துடன் நிரூபித்தனர். மேலும் கொலை நடப்பதற்கு 15 தினங்களுக்கு முன்பாக அபிராமி வீட்டிலிருந்து மாயமாகிவிட்டதாகவும் தீவிரமாக தேடிய பின்னர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் ஒரு பகல் ஒரு இரவு தங்கி இருந்த வரை சமரச பேசி அழைத்து வந்ததாகவும் சம்பவத்தன்று குழந்தைகளுக்கு பாலில் மாத்திரை கலந்து கொடுத்து விடு என்று வீட்டு வாசலில் நின்று மீனாட்சி சுந்தரம் அபிராமியிடம் பேசியதே கேட்டதாகவும் பின்னர் அபிராமி ஸ்கூட்டியை மீனாட்சி சுந்தரம் ஓட்ட அபிராமி பின்னால் அமர்ந்து ஒன்றாக வெளியில் சென்றதாகும் ஹவுஸ் ஓனர் சாட்சியமளித்தார்