- Home
- Tamil Nadu News
- 300 சவரன் நகை! 78 நாளும் டார்ச்சரால் உயிரிழந்த ரிதன்யா கணவரின் குடும்பத்தினர் எடுத்த முடிவு! குறுக்கே வந்த தந்தை!
300 சவரன் நகை! 78 நாளும் டார்ச்சரால் உயிரிழந்த ரிதன்யா கணவரின் குடும்பத்தினர் எடுத்த முடிவு! குறுக்கே வந்த தந்தை!
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், விசாரணை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின் குமார்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.
அன்று முதலே தனது கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மன ரீதியாகவும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து வந்ததாக கூறி தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ரித்ன்யாவின் தந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, காவல்துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி வழக்கை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.